Paralympics 2024: பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் அவானி லெகாரா தங்கம் வென்று அசத்தல்..!
பாராலிம்பிக்ஸ் தொடரின் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவானி லெகாரா மற்றும் மோனா அகர்வால் ஆகிய இருவரும் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
ஆகஸ்ட் 30, பாரிஸ் (Sports News): பாரிஸ் நகரில் ஒலிம்பிக் தொடர் சில வாரங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், தற்போது பாராலிம்பிக்ஸ் (Paralympics 2024) தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இன்று (ஆகஸ்ட் 30) மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதலில் (Shooting) 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் அவானி லெகாரா (Avani Lekhara) மற்றும் மோனா அகர்வால் (Mona Agarwal) ஆகிய இருவரும் பங்கேற்றனர்.
இதில், அவானி லெகாரா 2-வது இடத்தையும், மோனா அகர்வால் 5-வது இடத்திலும் நிறைவு செய்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இதன்பின், இறுதிச்சுற்று ஆட்டத்தில், தொடக்கத்தில் இருந்தே அவானி லெகாரா முதலிடத்தில் தொடர்ந்து வந்தார். அதேபோல், மோனா அகர்வாலும் டாப் 3 இடங்களில் நீடித்தார். இறுதியில், மோனா அகர்வால் 228.7 புள்ளிகளுடன் வெண்கலம் (Bronze Medal) வென்று வெளியேறினார். இதையடுத்து, இந்தியாவின் அவானி லெகாரா 249.7 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் (Gold Medal) வென்று அசத்தினார். Google Doodle: பாரா ஒலிம்பிக் 2024 போட்டிகள் தீவிரம்; கூடைபந்துக்கான சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்.!
பாராலிம்பிக்ஸ் தொடரில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இவ்வளவு புள்ளிகளை வேறு யாரும் இதுவரை எட்டியதே இல்லை. தங்கப் பதக்கம் வென்றதோடு சாதனை படைத்துள்ள அவானி லெகாரா உற்சாகமாக அதனை கொண்டாடினார். அதுமட்டுமல்லாமல் கடந்த 2021-ஆம் ஆண்டு டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் தொடரிலும் அவானி லெகாரா தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 2 பாராலிம்பிக்ஸ் தொடரில் தொடர்ந்து 2 தங்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையையும் அவானி லெகாரா படைத்துள்ளார்.
இதன் மூலமாக பாராலிம்பிக்ஸ் தொடரின் 2-வது நாளிலேயே 2 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா பதக்க எண்ணிக்கையை தொடங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அவானி லெகாரா மற்றும் மோனா அகர்வாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவானி லெகாரா: