Google Doodle on 30 Aug 2024 (Photo Credit: @Sriramrpckanna1 X)

ஆகஸ்ட் 30, புதுடெல்லி (New Delhi): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 (Paris Olympics 2024) போட்டிகளில் கலந்துகொண்ட 195 நாடுகளில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் அதிக பதக்கங்களை வென்று முதல் இரண்டு இடத்தை தக்கவைத்துக்கொண்டன. அதனைத்தொடர்ந்து, பாரிஸில் பாரா ஒலிம்பிக் (Para Olympics 2024) எனப்படும் மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான 17 வது பாராலிம்பிக் (Paralympics 2024 Paris) போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 184 நாடுகளை சேர்ந்த 4484 வீரர்-வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர். National Sports Day 2024: தேசிய விளையாட்டு தினம்.. வரலாறு என்னனு தெரிஞ்சிக்கலாம் வாங்க.! 

கூகுளின் சிறப்பு டூடுல்:

இந்தியா சார்பில் 90 க்கும் அதிகமான வீரர்-வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 35 க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். 6 பேர் தமிழர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர்கள் இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று கொடுப்பார்கள் என நம்பப்படுகிறது. ஆகஸ்ட் 30ம் தேதியான இன்று இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரர்கள் பாரா பேட்மிட்டன், தடகளம், துப்பாக்கிசூடுதல், வில் எய்தல், சைக்கிளிங் உட்பட பல்வேறு பிரிவுகளில் நடக்கும் போட்டியை எதிர்கொள்கின்றனர். இதனிடையே, இன்று நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டிகளை மையப்படுத்தி, கூகுள் நிறுவனம் தனது டூடுலை வெளியிட்டு இருக்கிறது. பேஸ்கட் பால் (Basketball) விளையாட்டை பிரதிபலிக்கும் பொருட்டு சிறப்பு டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.

கூகுளின் சிறப்பு டூடுலை இங்கு அழுத்தி கண்டு மகிழவும்: