Hangzhou Asian Games: ஆசிய விளையாட்டுகளில் முதல் தங்கப்பதக்கத்தை வாங்கியது இந்தியா - துப்பாக்கிசுடும் போட்டியில் அபாரம்.!

19வது ஆசிய விளையாட்டுப்போட்டிகளை சீனா தலைமையேற்று நடத்துகிறது.

Rudranksh Patil, Aishwary Tomar and Divyansh Panwar (Photo Credit: Twitter)

செப்டம்பர் 25, ஹாங்ஜூ (Sports News): சீனாவில் உள்ள ஹாங்ஜூ நகரில் ஆசிய விளையாட்டுப்போட்டிகள் 2022 தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் 23ம் தேதி கோலாகலமாக தொடங்கிய போட்டித்தொடர், அக்டோபர் மாதம் 08ம் தேதி வரை நடைபெறுகிறது.

19வது ஆசிய விளையாட்டுப்போட்டிகளை சீனா தலைமையேற்று நடத்துகிறது. பல்வேறு பிரிவுகளில் ஆசியாவில் உள்ள நாடுகள் அனைத்தும் சீனாவில் தங்களின் வீரர்-வீராங்கனைகளை வெற்றிக்காக அனுப்பி வைத்துள்ளது.

கிட்டத்தட்ட 39 வகையான விளையாட்டுப்போட்டிகள் அங்கு நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் முடிவில் வெற்றி பெறுவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் அறிவிக்கப்படும். Red Banana Benefits: ஆண்மைக்குறைவு, நரம்புத்தளர்ச்சி, கண் பிரச்சனைகளுக்கு அசத்தல் தீர்வு: செவ்வாழையில் இருக்கும் வியக்கவைக்கும் நன்மைகள் இதோ.!

இதனால் ஆசிய நாடுகளுக்கு இடையே போட்டித்தன்மை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளது. 10 மீட்டர் அளவிலான துப்பாக்கிசூடும் போட்டியில் ருத்ரன்க்ஸ் பாட்டில், ஐஸ்வரி தோமர், திவ்யன்ஸ் பணிவார் ஆகியோர் குழு தங்கத்தை பெற்றுள்ளது.

19வது ஆசிய நாடுகளுக்கு இடையேயான போட்டியில், இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் இதுவேயாகும்.