IND Vs NZ: இந்திய அணிக்கு சாதகமாகுமா புனே மைதானம்?.. முந்தைய ஆண்டுகளில் நடந்தது என்ன?.. விபரம் இதோ.!

இதனால் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் முந்தைய வரலாறுகள் கவனிக்கப்படும் வகையில் அமைந்துள்ளது.

MCA Stadium Pune (Photo Credit: @Crick_Momentum X)

அக்டோபர் 23, புனே (Cricket News): இந்தியாவுக்கு (NZ India Tour) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து (New Zealand Cricket Team) கிரிக்கெட் அணி (IND Vs NZ Test), 3 டெஸ்ட் தொடர்களில் மோதுகிறது. இதில் முதல் போட்டி பெங்களூரில் (Bangalore Stadium) நடைபெற்ற நிலையில், நியூசிலாந்து அணி கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியை பெங்களூர் மைதானத்தில் வீழ்த்தி வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர், அக்.24ம் தேதியான நாளை காலை 09:30 மணிமுதல் தொடங்கி நடைபெறுகிறது. எஞ்சியுள்ள இரண்டு ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றிபெற்றால் மட்டுமே, இந்த தொடரை கைப்பற்றும் என்பதால், இந்திய அணியின் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.

தென்னாபிரிக்கா - இந்தியா 2019 போட்டி (IND Vs SA 2019 Test):

கடந்த 2019ம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணி புனேவில் உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் (Maharashtra Cricket Association Stadium MCA Pune) மைதானத்தில் வைத்து விளையாடி இருந்தது. இந்த போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. விராட் கோலி அன்று அணியை திறம்பட நிர்வகித்து, ஆட்டமிழக்காமல் 254 ரன்களை குவித்தார். இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்களை குவித்து அசத்தியது. மயங்க் அகர்வால் 108 ரன்கள் எடுத்திருந்தார். ரவீந்திர ஜடேஜா, ரஹானே ஆகியோரும் தங்களின் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இதனால் தென்னாபிரிக்க அணி திணறிப்போனது. IND Vs NZ Test: இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கேன் வில்லியம்சன் விலகல்.. காரணம் என்ன..? 

இந்தியா அபார வெற்றி:

மறுமுனையில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் பேட்டிங் வரிசை அடுத்தடுத்து சரிந்து தோல்வி உறுதியானது. டூ ப்ளசிஸ், கேசவ் மகாராஜ் நின்று ஆடினாலும் 275 ரன்கள் மட்டுமே அவர்களால் குவிக்க முடிந்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் உமேஷ் 3 விக்கெட்டையும், அஸ்வின் 4 விக்கெட்டையும் கைப்பற்றி அசதி இருந்தனர். எனினும், இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களில் சுருண்டாலும், அஸ்வின் - ஜடேஜா கைகோர்த்து தென்னாபிரிக்க பேட்ஸ்மேன்களை பதறவைத்தனர். இதனால் ஆட்டத்தில் இந்தியா வெற்றி அடைந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி:

அதேபோல, கடந்த 2017ம் ஆண்டில் புனே கிரிக்கெட் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை வீழ்த்தி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ், மொத்தமாக இரண்டு இன்னிங்கிஸிலும் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி தந்தார். 441 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது, இரண்டாவது இன்னிங்ய்சில் 107 ரன்களை மட்டுமே குவித்து இருந்தது. அஸ்வின் - உமேஷ் ஆஸி., அணியை 285 ரன்களில் கட்டுப்படுத்தினாலும், இந்திய அணியால் ஆஸி.,யின் செயல்பாடுகளை எதிர்கொள்ள இயலாமல் தவித்துப்போயினர்.

களம் யாருக்கு சாதகம்?

புனேவில் 2017ல் நடைபெற்ற ஆட்டத்தின் தோல்வி இந்திய அணியை வெகுவாக பாதித்திருந்த நிலையில், தென்னாபிரிக்க அணியுடன் அதனை தீரமாக எதிர்கொண்டு, வியூகம் வகுத்து வெற்றி அடைந்தது. தற்போது நடைபெறவுள்ள நியூசிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் 2024ல் முடிவுகள் இன்னும் 2 நாட்களில் தெரியவரும் என்பதால், அதுவரை காத்திருப்போம். தென்னாபிரிக்க அணியை வீழ்த்திய வியூகம் பலிக்குமா? களம் நியூசிலாந்துக்கு சாதகமாக செல்லுமா? என்ற பரபரப்பு ரசிகர்களுக்கும் தொற்றிக்கொண்டுள்ளது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif