IND Vs NZ Women's T20 WC 2024: மகளிர் டி20 உலகக்கோப்பை 2024; இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை..!
ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.
அக்டோபர் 04, துபாய் (Sports News): 2024-ஆம் ஆண்டு ஐசிசி-யின் 9-வது மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் (ICC Women's T20 World Cup 2024) போட்டி நேற்று (அக்டோபர் 03) தொடங்கியது. இந்தத் தொடர் முழுவதும் ஐக்கிய அரபு எமிரேட்சில் துபாய் மற்றும் சார்ஜாவில் நடக்கிறது. வருகின்ற அக்டோபர் 20-ஆம் தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ’ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. China Open Tennis 2024: சீனா ஓபன் டென்னிஸ்; காா்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்..!
இந்நிலையில், இன்று (அக்டோபர் 04) ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் (IND Vs NZ) மோதுகிறது. இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் (Dubai) நடக்கிறது. இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட் ரிக்ஸ், ஷபாலி வர்மா, ரிச்சாகோஷ், ஹேமலதா ஆகியோரும், பந்துவீச்சில் தீப்தி சர்மா, ஸ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்ட்ரகர், ரேணுகா சிங், ராதா யாதவ், ஆஷா சோபனா ஆகியோரும் உள்ளனர்.
சோபி டிவைன் (Sophie Devine) தலைமையிலான நியூசிலாந்து அணியில் அமெலியா கெர்,பேட்ஸ்,ஜார்ஜியா பிளிம்மர், லியா தஹுஹு, ஜெசிகா கெர், ஈடன் கார்சன், மேடி கிரீன், பிரான் ஜோனாஸ், புரூக் ஹாலிடே, ரோஸ்மேரி மெய்ர் ஆகிய வீராங்கனைகள் உள்ளனர். இதுவரை இந்திய மகளிர் அணி எந்த உலக கோப்பையையும் வெல்லவில்லை. கடந்த 2020-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இம்முறை உலக கோப்பையை இந்தியா வெல்லுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.