Carlos Alcaraz (Photo Credit: @carlosalcaraz X)

அக்டோபர் 03, பெய்ஜிங் (Sports News): சீனா ஓபன் சர்வதேச டென்னிஸ் (China Open Tennis) போட்டி பெய்ஜிங் நகரில் (Beijing) நடைபெற்று வருகின்றது. இத்தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று (அக்டோபர் 03) நடைபெற்றது. இதில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் (Carlos Alcaraz) மற்றும் இத்தாலியின் ஜன்னிக் சின்னெர் ஆகியோர் மோதினர். தொடக்கத்தில் இருந்தே இருவரும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தனர். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 என்ற புள்ளிக்கணக்கில் ஜன்னிக் சின்னெர் வென்ற நிலையில், 2-வது செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினார். Babar Azam Quits Captaincy: "இனி மேல் தான் டா என் ஆட்டத்தையே பார்க்கப் போறீங்க" மீண்டும் கேப்டன்சியிலிருந்து விலகிய பாபர் அசாம்..!

இதனைத் தொடர்ந்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே அல்காரஸ் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடினார். இறுதியில் பரபரப்பாக நடைபெற்ற 3-வது செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் அல்காரஸ் கைப்பற்றினார். இதன்மூலம் சின்னெரை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.