INDW Vs NZW: நியூசிலாந்து 232 ரன்களுக்கு ஆல் அவுட்.. தொடரை வெல்லுமா இந்திய மகளிர் அணி..?

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற 233 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

INDW Vs NZW 3rd ODI (Photo Credit: @BCCIWomen X)

அக்டோபர் 29, அகமதாபாத் (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் (INDW Vs NZW 3rd ODI) அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அனைத்து போட்டிகளும் அகமதாபாத்தில் (Ahmedabad) உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதன்மூலம் 1-1 என சமனில் உள்ளது. BAN Vs RSA 2nd Test: முதல் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 307 ரன்கள் குவிப்பு.. டி சோர்சி, ஸ்டப்ஸ் அபார சதம்..!

இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்களை இழந்து தடுமாறியது. 88 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில், புரூக் ஹாலிடே (Brooke Halliday) மற்றும் இசபெல்லா கேஸ் ஆகிய இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேகரித்தனர். இதன்மூலம், நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நியூசிலாந்து அணி தரப்பில் புரூக் ஹாலிடே 86 ரன்கள் அடித்தார். இந்தியா சார்பில் தீப்தி சர்மா (Deepti Sharma) 3, பிரியா மிஸ்ரா 2, ரேணுகா மற்றும் சைமா தலா 1 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்நிலையில், இந்திய மகளிர் அணி வெற்றி பெற 232 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீப்தி சர்மா அபாரம்: