India Women Vs South Africa Women: இந்தியா - தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி.. முழு விபரம் உள்ளே.!

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs தென்னாப்பிரிக்க மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி அக்டோபர் 09-ஆம் தேதி நடைபெறுகிறது.

Harmanpreet Kaur & Laura Wolvaardt | INDW Vs SAW ICC Women's Cricket Cup 2025 (Photo Credit : @ICC / @CricCrazyVeena X)

அக்டோபர் 07, விசாகப்பட்டினம் (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup 2025) கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி கோலாலமாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 2ஆம் தேதி வரை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதும் இந்த போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 2ஆம் தேதி நிறைவு பெறுகிறது. தற்போது வரை ஏழு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

இந்தியா எதிர் தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் (India - South Africa Women's Cricket Match):

இதில் பத்தாவது போட்டியில் இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும், தென்னாப்பிரிக்க மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும் (India Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team) மோதுகின்றன. இந்த போட்டி அக்டோபர் 09-ஆம் தேதி ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் காணலாம். முன்னதாக கடந்த அக்டோபர் 05-ஆம் தேதி இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி அடைந்தது. ENGW Vs BANW: இங்கிலாந்து Vs வங்கதேசம் பெண்கள் கிரிக்கெட்.. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு.!

வெற்றி வாகை சூடப்போவது யார்?

அதேபோல இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி இடையே நடைபெறும் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க அணியும் சமமான அளவு திறனுடன் இருப்பதால் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup 2025 India Vs South Africa):

போட்டி அணிகள்: இந்தியா W Vs தென்னாப்பிரிக்கா W (India Women's Vs South Africa Women's Cricket)

நடைபெறும் இடம்: ஏசிஏ-விடிசிஏ கிரிக்கெட் மைதானம், விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசம்

போட்டி முறை: 50 ஓவர்கள்

போட்டி தொடங்கும் நேரம்: நண்பகல் 03:00 மணி

நேரலை விபரம்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement