Nat Sciver-Brunt Nigar Sultana Joty ICC Women's Cricket Cup 2025 (Photo Credit : @ICC X)

அக்டோபர் 07, அசாம் (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 (ICC Women's Cricket World Cup 2025) கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் இந்த தொடர் 02 நவம்பர் 2025ல் நிறைவு பெறுகிறது. நேற்று நடைபெற்ற நியூசிலாந்து பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி இடையேயான ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி அசத்தல் வெற்றி பெற்றது. NZW Vs SAW: நியூசிலாந்து Vs தென்னாப்பிரிக்கா,, மாஸ் காட்டிய தென்னாபிரிக்கா அசத்தல் வெற்றி.. ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை 2025..!

இங்கிலாந்து எதிர் வங்கதேசம் பெண்கள் கிரிக்கெட் (England - Bangladesh Women's Cricket Match):

அதனைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 07) நடப்பு தொடரின் எட்டாவது ஆட்டம் இங்கிலாந்து பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி - வங்கதேசம் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (England Women's National Cricket Team Vs Bangladesh Women's National Cricket Team) இடையே நடைபெறுகிறது. இங்கிலாந்து - பங்களாதேஷ் இடையே நடைபெறும் போட்டி அசாம் மாநிலத்தில் உள்ள கௌகாத்தி பரஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இன்று நண்பகல் 3 மணியளவில் போட்டி தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் போட்டியின் முதல் கட்டமாக டாஸ் நடைபெற்ற நிலையில், டாஸில் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இங்கிலாந்து Vs வங்கதேசம் பெண்கள் கிரிக்கெட் : (ICC Women's Cricket World Cup 2025 England Vs Bangladesh):

போட்டி அணிகள்: இங்கிலாந்து W Vs வங்கதேசம் W (England Women's Vs Bangladesh Women's Cricket)

நடைபெறும் இடம்: பரஸ்பரா கிரிக்கெட் மைதானம், கவுகாத்தி, அசாம்

போட்டி முறை: 50 ஓவர்கள்

போட்டி தொடங்கும் நேரம்: நண்பகல் 03:00 மணி

நேரலை விபரம்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)

இங்கிலாந்து பெண்கள் Vs பங்களாதேஷ் பெண்கள் அணி விபரம் (England Women Vs Bangladesh Women Squad):

பங்களாதேஷ் பெண்கள் அணி விபரம் (Bangaladesh Women Squad):

ரூப்யா ஹைதர், ஷர்மின் அக்தர், நிகர் சுல்தானா ஜோட்டி (C), சோபனா மோஸ்டரி, ரிது மோனி, ஷோர்னா அக்டர், ஃபஹிமா காதுன், நஹிதா அக்டர், ரபேயா கான், மருபா அக்தர், நி அக்தர், ஷங்ஜிதா

இங்கிலாந்து பெண்கள் அணி விபரம் (England Women Squad):

டாமி பியூமண்ட், ஆமி ஜோன்ஸ் (WK), ஹீதர் நைட், நாட் ஸ்கைவர் பிரண்ட் (C), சோபியா டன்க்லி, எம்மா லாம்ப், ஆலிஸ் கேப்சி, சார்லி டீன், சோஃபி எக்லெஸ்டோன், லின்சி ஸ்மித் மற்றும் லாரன் பெல்