India Vs Sri Lanka Masters 2025: மாஸ்டர்ஸ் லீக் 2025; இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதல்.. நேரலையில் பார்ப்பது எப்படி? சச்சின் & சங்ககரா மாஸ் சம்பவம் லோடிங்.!

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் மீண்டும் சர்வதேச அளவில் களமிறங்க மாஸ்டர்ஸ் லீக் போட்டிகள் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுகிறது.

Sachin Tendulkar & Kumar Sangakkara | Masters League 2025 (Photo Credit: @SachinRupak10 / @rohit_balyan X)

பிப்ரவரி 22, நவி மும்பை (Sports News): சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டிகள் 2025 (International Masters League 2025) முதல் சீசன், இன்று (22 பிப். 2025) இரவு 7 மணி முதல் தொடங்குகிறது. ஐஎம்எல் 2025 (IML 2025) போட்டியில், இந்தியா மாஸ்டர்ஸ், இலங்கை மாஸ்டர்ஸ், ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ், இங்கிலாந்து மாஸ்டர்ஸ், தென்னாபிரிக்கா மாஸ்டர்ஸ், வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் என 6 அணிகள் அடுத்தடுத்து 18 ஆட்டங்களில் மோதுகிறது. டி20 முறையில் நடைபெறும் மாஸ்டர்ஸ் லீக் போட்டி அட்டவணை முன்னதாகவே வெளியிடப்பட்டு இருந்தது. நவி மும்பை, ராய்ப்பூர், வதோதரா ஆகிய இடங்களில் போட்டிகள் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த போட்டியை கலர்ஸ் சினிபிளெக்ஸ் (Colors Cineplex) தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் (Jio Hot Star) பக்கத்தில் நேரலையை காணலாம். IML 2025: மாஸ்டர்ஸ் லீக் 2025: கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? உங்களின் நாயகர்கள் மீண்டும் களத்தில்.. நாளைய போட்டி விபரம்.. முழு தகவல் இதோ.! 

இன்று இந்தியா - இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் மோதல்:

மாஸ்டர்ஸ் லீக் 2025 தொடரின் முதல் ஐந்து ஆட்டங்கள், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை (Navi Mumbai Cricket Stadium) கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. சுமார் 45,300 பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலான திறன் கொண்ட மைதானத்தில் தொடக்க விழாவுடன் (International Masters League IML 2025 Opening Ceremony) இந்தியா மாஸ்டர்ஸ் - இலங்கை மாஸ்டர்ஸ் (India Masters Vs Sri Lanka Masters) அணிகள் நேரடியாக மோதிக்கொள்கின்றன. மாலை 06:30 மணிக்கு டாஸ் போடப்பட்டு, இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெறுகிறது. ENG Vs AUS Toss Update: சாம்பியன்ஸ் டிராபி 2025: டாஸ் வென்று ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு.. இங்கிலாந்து பேட்டிங்.. அணி விபரம் இதோ.! 

இந்தியா மாஸ்டர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் (Team India Masters Squad):

இந்தியா மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அணியை சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) வழிநடத்த, அணியில் யுவராஜ் சிங் (Yuvaraj Singh), யூசுப் பதான் (Yusuf Pathan), இர்பான் பதான் (irfan Pathan), அம்பத்தி ராயுடு (Ambati Rayudu), ஸ்டுவர்ட் பின்னி (Stuart Binny), தவால் குல்கர்னி (Dhawal Kulkarni), வினய் குமார் (Vinay Kumar), ஷபாஸ் நதீம் (Shabhaz Nadeem), ராகுல் சர்மா (Rahul Sharma), நமன் ஓஜா (Naman Ojha), பவன் நெகி (Pawan Negi), குருகீர்த் சிங் (Gurkeerat Singh), அபிமன்யு மிதுன் (Abhimanyu Mithun), சவுரப் திவாரி (Saurabh Tiwary) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். DC Vs UPW: பெண்கள் பிரீமியர் லீக்.. இன்று டெல்லி - உபி அணிகள் மோதல்.. அதலபாதாளத்தில் இருந்து தப்பிக்குமா உபி வாரியர்ஸ்? 

இலங்கை மாஸ்டர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் (Team Sri Lanka Masters Squad):

இலங்கை மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அணியை குமார் சங்ககரா (Kumar Sangakkara) வழிநடத்த, அணியில் ரொமேஷ் கலுவிதரனா (Romesh Kaluwitharana), உபுல் தரங்கா (Upul Tharanga), லஹிரு திரிமன்னே (Lahiru Thirimanne), அசோல குன்ராத்னே (Asela Gunaratne), தம்மகீயா பிரசாத் (Dhammika Prasad), சதுரங்கா சில்வா (Chaturanga Silva), சீக்குகே பிரசன்னா (Seekkuge Prasanna), இசுரு உடனா (Isuru Udana), சுரங்கா லக்மல் (Suranga Lakmal), நுவான் பிரதீப் (Nuwan Pradeep), தில்ருவான் பெரேரா (Dilruwan Perera), ஜீவன் மெண்டிஸ் (Jeevan Mendis), ஆக்ஷன் பிரியஞ்ஜன் (Ashan Priyanjan), சிந்தக ஜெயசிங்கே (Chinthaka Jayasinghe) ஆகியோர் இடம்பெறுள்ளனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Tags

International Masters League International Masters League 2025 Cricket’s Masters IML T20 The Baaps Of Cricket IML T20 2025 IML T20 Match Schedule International Masters League T20 Schedule IML T20 Schedule in Tamil International Masters League Schedule in Tamil IML T20 Live Where to Watch IML T20 Where to Watch Masters League 2025 India Masters India Masters 2025 West Indies Masters West Indies Masters 2025 Sri Lanka Masters Sri Lanka Masters 2025 Australia Masters Australia Masters 2025 England Masters England Masters 2025 South Africa Masters 2025 South Africa Masters Jio Hotstar Colors Cineplex IML T20 2025 Full Schedule IML T20 2025 Full Schedule in Tamil கிரிக்கெட் கிரிக்கெட் செய்திகள் இந்தியா கிரிக்கெட் பிசிசிஐ கிரிக்கெட் போட்டி விளையாட்டு விளையாட்டு செய்திகள் Sports Sports News Sports News Tamil Latest Cricket News in Tamil Cricket Cricket News Cricket News Tamil Tamil Cricket News Cricket News in Tamil Live News Tamil Today News in Tamil Today News Tamil Cricket Updates Tamil மாஸ்டர்ஸ் லீக் மாஸ்டர்ஸ் லீக் 2025 Masters League Live Watching இந்தியா மாஸ்டர்ஸ் இந்தியா மாஸ்டர்ஸ் 2025 சச்சின் தெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர் Sachin Tendulkar ஸ்ரீலங்கா மாஸ்டர்ஸ் Masters Premier League Masters Premier League Tamil India Vs Sri Lanka Cricket India Vs Sri Lanka Masters 2025 IND Vs SL Masters 2025 Sachin Vs Sangakkara இந்தியா இலங்கை IND Vs SL Masters 2025 Cricket Masters League Masters League 2025 ஐஎம்எல் ஐஎம்எல் 2025


Share Now