IOC Approves Cricket: சர்வதேச ஒலிம்பிக்கில் இடம்பெற்றது கிரிக்கெட்; 2028ல் ஒலிம்பிக் டி20 ஆட்டம்.!
ஒலிம்பிக் கமிட்டி முடிவுப்படி கிரிக்கெட்டில் ஆடவர், பெண்கள் டி20 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 16, மும்பை (Sports News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மாநகரில் வைத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (International Olympic Committee IOC) கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles Olympic 2028) நகரில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் உட்பட பிற விளையாட்டுகளை இணைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று கிரிக்கெட்டை (Cricket) ஒலிம்பிக் 2028ல் அனுமதிப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கிரிக்கெட் உட்பட புதிய 4 விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் வழங்கியது. Kolkata Shocker: விவாகரத்துக்கு விண்ணப்பித்து மனைவியை கொலை செய்த கணவன்; நிம்மதியின்மையால் நடந்த பயங்கரம்.!
இதற்கு இரண்டு ஐஓசி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒருவர் தனது வாக்குகளை அளிக்காமல் அங்கிருந்து வெளியேறினார். நடப்பு ஆண்டில் ஒலிம்பிக் கமிட்டியின் 141வது ஆண்டு மாநாடு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. ஒலிம்பிக் கமிட்டி முடிவுப்படி கிரிக்கெட்டில் ஆடவர், பெண்கள் டி20 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதேபோல, பேஸ்பால் சாப்ட்பால், பிளாக் புட்பால், லாகிரோஸ், ஸ்குவாஷ் (Baseball-Softball, Flag Football, Lacrosse, Squash) போட்டிகளும் ஒலிம்பிக் 2028ல் இணைக்கப்பட்டுள்ளன.