CSK Victory: டி.எல்.எஸ் முறையில் அபார வெற்றி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. விண்ணைப்பிளந்த விசில் சத்தம்..!

ஓராண்டு இடைவெளிக்கு பின் சென்னை அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை மீண்டும் வென்றுள்ளது.

IPL 2023 Final | CSK Championship Victory (Photo Credit: Twitter)

மே 30, குஜராத் (Cricket News): டாடா ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி (IPL 2023 Final), குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இன்று நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மழையின் காரணமாக ஆட்டம் தடைபட்டுப்போனது.

இன்று ரசிகர்களின் ஆசைப்படி வருண பகவான் சற்றே கருணை காட்டினாலும், இறுதியில் தனது வேலையை காட்டினார். ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி (M.S Dhoni), பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய குஜராத் (CSK Vs GT) அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது.

குஜராத் அணி சார்பில் விளையாடிய சாஹா 39 பந்துகளில் 54 ரன்கள் அடித்தார். ஹில் 20 பந்துகளில் 39 ரன்கள் அடித்தார். தமிழரான சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசினார். பாண்டியா 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். இவர்களில் ஹில் தோனியின் மின்னல் வேக செயல்பாட்டினால் வெளியேற்றப்பட்டார்.

முதல் பாதி ஆட்டம் முடிந்து சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தொடங்க தொடர்ந்து தாமதமாக, இறுதியாக டிஎல்எப் முறைப்படி சென்னை அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சென்னை அணி சார்பில் விளையாடிய வீரர்களின் முயற்சியால் 171 ரன்கள் எடுத்து வெற்றி நமதாக்கப்பட்டது‌. இதில் ருத்ராஜ் 16 பந்துகளில் 26 ரன்னும், கான்வே 25 பந்துகளில் 47 ரன்னும், டியூப் 21 பந்துகளில் 32 ரன்னும், ரஹானே 13 பந்துகளில் 27 ரன்னும், ராயுடு 8 பந்துகளில் 19 ரன்னும், ஜடேஜா 6 பந்துகளில் 15 ரன்னும் அடித்து அணியை வெற்றியடைய வைத்தனர்.

தோனியின் விக்கெட்டுக்கு பின்னர் ஜடேஜாவின் ஆட்டம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் ஜடேஜா, சாய் சுதர்சன் ஆகியோர் அதிகளவு கவனிக்கப்பட்டனர். 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை சென்னை அணி மீண்டும் வென்றுள்ளது.