RCB Vs KKR Fans Argument: ஆர்சிபி வெர்சஸ் கொல்கத்தா அணி போட்டியில், டீசர்ட் சண்டை; சர்ச்சை வீடியோ வைரல்.!

2024 ஐபிஎல் தொடரின் பத்தாவது ஆட்டத்தில், பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டம் ரன்களை குவித்தாலும், இறுதியில் கொல்கத்தா அணி அதனை சேசிங் செய்து வெற்றிகண்டது.

RCB Vs KKR | IPL 2024 (Photo Credit: @AwaaraHoon X)

மார்ச் 30, பெங்களூர் (Sports News): ஐபிஎல் 2024 கிரிக்கெட் (IPL 2024) தொடரின் பத்தாவது ஆட்டம், நேற்று பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் - கொல்கத்நா நைட் ரைடர்ஸ் (RCB Vs KKR) அணியும் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்தது. பெங்களூர் அணியின் சார்பில் விளையாடியவர்களில் விராட் கோலி 59 பந்துகளில் 83 ரன்கள் அடித்து விளாசி இருந்தார். கிரீன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார். கொல்கத்தா அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் ராணா, ருசேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர். 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள் களமிறங்கி அதிரடியாக ஆடியதால் அணியின் வெற்றி வசமானது. Women Football Shocker: இந்திய கால்பந்தாட்ட சம்மேளன உறுப்பினர் மீது குற்றசாட்டு: குடிபோதையில் தாக்கியதாக பரபரப்பு புகார்.! 

அதிரடியாக வெற்றிகண்ட கொல்கத்தா அணி: கொல்கத்தா சார்பில் விளையாடியவர்களில் சால்ட் 20 பந்துகளில் 30 ரன்னும், சுனில் 22 பந்துகளில் 47 ரன்னும், வெங்கடேஷ் ஐயர் 30 பந்துகளில் 50 ரன்னும், ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 39 ரன்னும் அடித்திருந்தனர். இதனையடுத்து, அணி 16.5 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான் எதிர் கொண்ட இரண்டு போட்டிகளில் இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முன்னிலையில் இருக்கிறது. ரன் ரேட் விகிதத்தில் +1.047 மதிப்புகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. மார்ச் 30ம் தேதி இன்று இரவு 7:30 மணியளவில் லக்னோ வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் - பஞ்சாப் கிங் (LSG Vs PBKS) அணியும் மோதிக் கொள்கின்றன. இந்த ஆட்டத்தை வீட்டில் இருந்தபடி ஜியோ சினிமா (Jio Cinema) செயலியில் நேரலையில் பார்க்கலாம்.

ஆர்.சி.பி-க்கு எதிரான விளையாட்டில், கொல்கத்தா அணி டீசர்ட் சர்ச்சை:

கம்பிர் - விராட் சந்திப்பு: