Sam Curran Dismiss Phil Salt: ஒரேயொரு யாக்கர் பால்; சால்ட்டின் கனவை தெறிக்கவிட்ட சாம் கரண்; மெய் சிலிர்க்கவைக்கும் வீடியோ இதோ.!
அதிரடி ஆட்டம் மற்றும் பந்துவீச்சுக்கு பெயர்போன சாம்கரன், நேற்றைய ஆட்டத்தில் தனது அணிக்கு எதிராக இமயமலைபோன்ற அளவில் ரன்களை குவித்து வந்த சால்ட்டின் விக்கெட்டை நொடியில் அகற்றினார்.
மார்ச் 27, (Sports News): ஐபிஎல் 2024 ஆம் தொடரில் (IPL 2024) 42வது ஆட்டம் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் - பஞ்சாப் கிங் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR Vs PBKS) அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. Alejandra Rodríguez Won Miss Universe Buenos Aires: 60 வயதில் அழகிப்பட்டம் வென்ற பெண்மணி; ஆச்சரியப்படவைக்கும் மூதாட்டியின் இளமை.!
அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் வசமான வெற்றி: அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் சால்ட் 37 பந்துகளில் 75 ரன்கள், சுனில் 32 பந்துகளில் 71 ரன்கள் அதிகபட்சமாக அடித்திருந்தனர். இதனையடுத்து, மறுமுனையில் 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் சார்பில் விளையாடியவர்களில், ஆட்டக்காரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் வெற்றிவசமானது.
சால்ட் போல்ட் அவுட்: நேற்றைய ஆட்டத்தில் ஜானி கிறிஸ்டோ 48 பந்துகளில் 108 ரன்களை அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆட்டத்தின் முடிவில் 18.4 ஓவர்களில் பஞ்சாப் அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியதைத்தொடர்ந்து அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாம் கரண், தனது யாக்கர் பந்து வீச்சினால் எதிரணிக்கு ரன்களை குவித்து வந்த சால்ட்டை 12.3 வது ஓவரில் வெளியேற்றி இருந்தார்.
தொடக்கத்தில் இருந்து கொல்கத்தா அணிக்காக ரன்களை குவித்து சதத்தை நோக்கிய பயணத்தை சால்ட் (Phil Salt) மேற்கொள்ள, ஷாம் கரண் (Sam Curran) அதனை தவிடுபிடியாக்கினார். இதுகுறித்த வீடியோ உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது.