IPL Auction 2025 Live

LSG Vs PBKS Highlights: ஐபிஎல் 2024 தொடரில் முதல் வெற்றியை சொந்த மண்ணில் உறுதி செய்த லக்னோ அணி; 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

இதனால் தனது முதல் வெற்றியை லக்னோ உறுதி செய்தது.

IPL 2024 Match 11 | LSG Vs PBKS (Photo Credit: @LSG X)

மார்ச் 31, (Cricket News): ஐபிஎல் 2024 தொடரில் (IPL 2024), லக்னோ வாஜ்பாய் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் (LSG Vs PBKS) அணிகளுக்கு இடையேயான 11வது ஆட்டம் நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் பேட்டிங் செய்த லக்னோ அணி சார்பில் விளையாடியவர்களில், குயின்டன் 38 பந்துகளில் 54 ரன்னும், கே பாண்டியா 22 பந்துகளில் 43 ரன்னும், நிகோலஸ் பூரான் 21 பந்துகளில் 42 ரன்னும் அதிகபட்சமாக சேர்த்து இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்ந்து இருந்தது. பஞ்சாப் அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் சாம் கரண் 3 விக்கெட்டையும், அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தி இருந்தனர். Sathu Beaten by Youth Gang: பெட்ரோல் பங்கில் பரபரப்பு செயல்; அமைதியாக நின்ற சாமியார் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்.! 

லக்னோ அணி அபார வெற்றி: இதனையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் ஆட்டக்காரர்கள், முதலில் நின்று ஆடினாலும் பின் தடுமாறி இலக்கை எட்டமுடியாமல் தவித்து தோல்வியை சந்தித்தனர். பஞ்சாப் அணியின் சார்பில் விளையாடியவர்களில் ஷிகர் தவான் 50 பந்துகளில் 70 ரன்னும், ஜானி பர்ஸிட்டோ 29 பந்துகளில் 42 ரன்னும், லியாம் 17 பந்துகளில் 28 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்த பஞ்சாப் அணி 178 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றி அடைந்தது. இது நடப்பு சீசனில் லக்னோ (Lucknow Super Giants LSG) அணியின் முதல் வெற்றி ஆகும். Ship Hits Bridge: மேரிலேண்ட் போல, பாலத்தின் மீது மோதிய கப்பல்; அமெரிக்காவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.! 

ஞாயிற்றுகிழமை கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் டமாகா கொண்டாட்டம்: இன்று (மார்ச் 31, 2024) மாலை 03:30 மணியளவில் அகமதாபாத்தில் குஜராத் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டமும், இரவு 07:30 மணியளவில் விசாகப்பட்டினத்தில் டெல்லி - சென்னை அணிகளுக்கு இடையேயான ஆட்டமும் நடைபெறுகிறது. இந்த ஆட்டங்களை நேரலையில் ஜியோ சினிமா (Jio Cinema) செயலியில் இலவசமாகவும், ஸ்போர்ட்ஸ் 18 (Sports 18) தொலைக்காட்சியிலும் கண்டுகளிக்கலாம்.

முதல் வெற்றிக்கனியை சுவைத்த லக்னோ அணி:

155.8 கிமீ வேகத்தில் பந்து வீசிய மயங்க் அகர்வால்: