MS Dhoni Birthday Celebration: கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சாக்ஷி தோனி; தல தோனிக்கு குவியும் வாழ்த்துக்கள்.!
அவரின் பிறந்தநாளை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
ஜூலை 07, ராஞ்சி (Cricket News): இந்திய கிரிக்கெட் அணி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகளின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரரும், உலகளவில் பிரபலமான விக்கெட் கீப்பருமானவர் மகேந்திர சிங் தோனி என்ற எம்.எஸ் தோனி (MS Dhoni). இவருக்கு இந்திய அளவில் மட்டுமல்லாது உலகளவிலும் ரசிகர்கள் ஏராளம். மைதானத்தில் எரிமலையாய் வெடிக்கும் கோபம் இருந்தாலும், அதனை முகத்தில் காண்பிக்காமல் அணியை சரியான திட்டமிடலுடன் வழிநடத்திச்செல்லும் குணம் கொண்ட எம்.எஸ் தோனி, மின்னல் வேக செயல்பாடு கொண்டவர்.
மத்திய அரசின் விருதுகள்:
இவரின் விக்கெட் கீப்பிங் சாதனை நொடிகளை இன்று வரை முறியடிக்க ஆட்களே இல்லை என்றும் கூறலாம். கடந்த 1971 ஜூலை 07ம் தேதியான இன்று எம்.எஸ் தோனி பிறந்தார். இன்று அவரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. சர்வதேச அளவில் உள்ள தோனியின் ரசிகர்கள் பலரும் தங்களது நாயகன் தோனியின் பிறந்தநாளை சிறப்பிக்கின்றனர். எம்.எஸ் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியே பல உலக கோப்பைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தது. இதனால் அவரின் செயல்களை பாராட்டி மத்திய அரசு ராகுல் காந்தி கேல் ரத்னா, பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கி கௌரவித்து இருக்கிறது. Brinjal Gravy Recipe: சுவைமிகுந்த கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
சச்சினுக்கு பின் மிகப்பெரிய பிரபலம்:
கடந்த 2004ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இந்தியாவுக்காக பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, ஒருநாள், டி20, 50 ஓவர் கொண்ட உலகக்கோப்பை என பல ஆட்டங்களில் சாதனைகளை படைத்து இருக்கிறார். 350 க்கும் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 10773 ரன்களை கடந்தும் இருந்தார். சச்சினுக்கு பின்னர் அதிக ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் இவர் கொண்டிருந்தார்.
சாதனைகளின் நாயகன்:
தோனியின் தலைமையிலான இந்திய அணியே சர்வதேச அளவில் ஐசிசி உலகக்கோப்பை, டி20 போட்டி, சாம்பியன்ஸ் ட்ராபி, ஆசியக்கோப்பை ஆகிய தொடர்களில் வெற்றியை கண்டு உலகெங்கும் பெருமை கொண்டது. தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனி, தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார். பல போட்டிகளில் தோனி வந்து களத்தில் இறங்கி சில பந்துகளை எதிர்கொண்டால் போதும் என்ற அளவுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கணவரின் பிறந்தநாளை சிறப்பித்த சாக்ஷி:
பல பெருமைகளை கொண்ட தல தோனிக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தோனி தனது மனைவி சாக்ஷி சிங் ராவத்துடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். இதுகுறித்த காணொளியை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.