Brinjal Gravy (Photo Credit: YouTube)

ஜூலை 06, சென்னை (Kitchen Tips): கத்திரிக்காயை வைத்து வித்தியாசமான முறையில் சுவையாக கத்திரிக்காய் கிரேவி (Brinjal Gravy) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இதனை, சாதம் மற்றும் இட்லி, தோசை தொட்டு சாப்பிட்டால் மணமணக்க ருசியாக இருக்கும். அவற்றை எப்படி செய்வது என்பதனை இதில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 400 கிராம்

எண்ணெய் - 3 தேக்கரண்டி

சீரகம், கரம் மசாலா - அரை தேக்கரண்டி

தக்காளி, பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

ஏலக்காய் - 2

இலை, பட்டை - சிறிதளவு

மிளகாய் தூள், வேர்க்கடலை பொடி - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது, சீரக பொடி, கொத்தமல்லி பொடி, காஷ்மீரி மிளகாய் பொடி - தலா 1 தேக்கரண்டி

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு. Transformer Explosion: மின்மாற்றி வெடித்து பயங்கர தீ விபத்து; தெருவோர கடைகள் தீயில் எரிந்து நாசம்..!

செய்முறை:

முதலில் கத்திரிக்காயை எடுத்து அதன் காம்புகளை சின்னதாக நறுக்கி, அதன் பின்புறம் இரண்டு பிரிவுகளாக பாதியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதனை தண்ணீரில் நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.

பின்னர், ஒரு கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காயை போட்டு, அது முக்கால்வாசி வெந்து வரும் வரை கிளறிவிட வேண்டும். இதனை ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அதே கடாயில் இலை, பட்டை, ஏலக்காய், சீரகம் சேர்த்துக் கொள்ளவும். மேலும், நறுக்கி வைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனுடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் பொடி, மஞ்சள் தூள், சீரக பொடி, கொத்தமல்லி பொடி, கரம் மசாலா மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

அதில், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கிய பிறகு அதில் வேர்க்கடலை பொடி சேர்த்து கிளறிவிட வேண்டும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இறுதியில், ஏற்கனவே வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை எடுத்து அதில் போடவும். பின்பு அதனை மிதமான சூட்டில் மூடி வைத்து, 10 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். பிறகு அதில் கொத்தமல்லி லேசாக தூவி விடவும். அவ்வளவுதான் சுவையான கத்திரிக்காய் கிரேவி ரெடி.