Neeraj Chopra Wins Gold Medal: ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம், வெள்ளி வென்று இந்தியா சாதனா: நீரஜ் சோப்ரா அபார வெற்றி.!

ஈட்டி எறிதலில் இந்தியாவை ஏற்கனவே பெருமையடைய செய்த நீரஜ் சோப்ரா, மீண்டும் இந்தியாவுக்கு சீன மண்ணில் மாபெரும் பெருமையை தேடித்தந்துள்ளார்.

Neeraj Chopra | Kishore Jena (Photo Credit: Twitter)

அக்டோபர் 04, ஹாங்சோ (Sports News): சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில், 19வது ஆசிய நாடுகள் விளையாட்டுபோட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் முன்னிலையில் தொடங்கிய விளையாட்டுகள், அக். 08ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

39 பிரிவுகளில் ஆசியாவில் உள்ள நாடுகள் பல்வேறு விளையாட்டுகளில் விளையாடுகிறது. இந்தியா இன்று வரை 17 தங்க பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தமாக 71 பதக்கங்களில் 26 வெள்ளி, 29 வெண்கலம் ஆகும். Rishabh Pant Birthday: நண்பனின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்: மகிழ்ச்சியில் ரிஷப் பண்ட்..! 

Neeraj Chopra (Photo Credit: Twitter)

இந்நிலையில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றுள்ளது. ஈட்டி எறிதலில் (Javelin throw) இந்தியாவை ஏற்கனவே பெருமையடைய செய்த நீரஜ் சோப்ரா, மீண்டும் இந்தியாவுக்கு சீன மண்ணில் மாபெரும் பெருமையை தேடித்தந்துள்ளார்.

ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) 88.88 மீட்டர் தூரம் ஈட்டியை எரிந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். அதனைத்தொடர்ந்து, கிஷோர் ஜெனா (Kishore Jena) வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய அணியினர் சீன மண்ணில் பதக்கங்களை குவித்து வருவது சர்வதேச அளவிலும் கவனிக்கப்படுகிறது.