IPL Auction 2025 Live

Jay Shah’s Net Worth 2024: புதிய ஐசிசி தலைவர் ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு..? முழு விவரம் உள்ளே..!

ஜெய்ஷா யார் அவருடைய சொத்து மதிப்பு என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Jay Shah (Photo Credit: @mandhana_smriti X)

ஆகஸ்ட் 29, மும்பை (Sports News): பிசிசிஐ-யின் (BCCI) தலைமை செயலாளராக இருந்த ஜெய்ஷா (Jay Shah), தற்போது ஐசிசி (ICC) தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் ஐசிசி தலைவர் (ICC Chairman) பதவிக்கு வந்திருக்கும் 5-வது இந்தியர் என்ற பெருமை ஜெய்ஷாவுக்கு வர இருக்கிறது. கிரெக் பார்க்லேவுக்குப் (Greg Barclay) பதிலாக ஜெய்ஷா தனது தலைவர் பதவியை இந்தாண்டு டிசம்பர் 01-ஆம் தேதி முதல் தொடங்குவார். ஜெய்ஷா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஆவார். இவர் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். பின்னர், கல்லூரி தோழியான ரிஷா பட்டேல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஆரம்பகால பயணம்:

முதன்முதலாக ஜெய்ஷா கடந்த 2009-ஆம் ஆண்டு குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக தன்னுடைய பணியை தொடங்கினார். அவரது தந்தை அமித்ஷா தான் அப்போதைய தலைவராக இருந்தார். இந்த சூழலில் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளராக கடந்த 2013-ஆம் ஆண்டு ஜெய்ஷா பதிவு உயர்வு பெற்றார். ஜெய்ஷாவின் முயற்சியால் தான் அகமதாபாத்தில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2015-ஆம் ஆண்டு பிசிசிஐ-யின் பொருளாதார குழுவில் உறுப்பினராக சேர்ந்த ஜெய்ஷா 2019-ஆம் ஆண்டு தான் பிசிசிஐ-யின் செயலாளராக பதவியேற்றார். ஜெய்ஷா தன்னுடைய பதவி காலத்தில் ஐபிஎல் ஒளிபரப்பு (IPL Telecast) உரிமையை 5 ஆண்டுகளுக்கு 48,390 கோடி ரூபாய் அளவுக்கு விற்று சாதனை படைத்தார்.  Paralympics Google Doodle: தொடங்குகிறது பாராலிம்பிக் போட்டிகள் 2024: கூகுளின் சிறப்பு டூடுல் இதோ.!

ஜெய்ஷாவின் வளர்ச்சி:

இதன் மூலம் உலக விளையாட்டு அரங்கில் 2-வது பணக்கார விளையாட்டு தொடராக ஐபிஎல் மாறியது. அது மட்டுமில்லாமல் ஜெய்ஷா மகளிர் பிரிமியர் லீக் (WPL) என்ற தொடரை தொடங்கி பெண்களுக்கான கிரிக்கெட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். மேலும், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சீர்திருத்தம், வீராங்கனைகளுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளம் போன்ற பல நடவடிக்கைகளை செய்தார். இதற்கிடையில், ஜெய்ஷா ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிங் (ACC) தலைவராகவும் செயல்பட்டார்.

சொத்து மதிப்பு:

ஜெய்ஷா கிரிக்கெட்டை தாண்டி ஒரு தொழிலதிபராகவும் இருந்துள்ளார். குசம் பீன்ஸ்வர் என்ற நிறுவனத்தில் 60 சதவீதம் பங்குகளை ஜெய்ஷா நிர்வகித்து வருகின்றார். இதன் மூலம் ஜெய்ஷாவின் சொத்து மதிப்பு சுமார் 124 கோடி அளவுக்கு இருக்கும். ஐசிசி பதவி கிடைத்தது குறித்து கருத்து தெரிவிக்கையில், 'ஐசிசி குழுவிடம் இணைந்து நமது கிரிக்கெட்டை இன்னும் உலக அளவில் பிரபலப்படுத்த கண்டிப்பாக முயற்சி செய்வேன். அனைத்து தரப்பினரும் அடங்கிய முன்னேற்றத்தை கொண்டு வர முயல்வேன்' என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.