ஆகஸ்ட் 28, பாரிஸ் (Sports News): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் (Paris Olympics 2024) கோலாகலமாக தொடங்கி நிறைவுபெற்றது. அதனைத்தொடர்ந்து, தற்போது பாரா ஒலிம்பிக் போட்டிகள் (Paralympic Games 2024) விறுவிறுப்புடன் தொடங்கி இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் அதிக அளவிலான பதக்கங்களை பெற்றது. அதனைத்தொடர்ந்து, தற்போது நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில் 194 க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 4,400 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தமட்டில் 32 வீராங்கனைகள் உட்பட 94 வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் விளையாட்டுப்போட்டியில் பங்கேற்கின்றனர். 6 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனிடையே, கூகுள் நிறுவனம் பாரா ஒலிம்பிக் போட்டிகளை வரவேற்கும் விதமாக கூகுள் டூடுலை வெளியிட்டு இருக்கிறது. Tanvi Patri Wins Asian Junior Badminton 2024: ஆசிய ஜூனியர் பாட்மிண்டன்.. தன்வி பத்ரி சாம்பியன்..!
கூகுள் சிறப்பு டூடுல் உங்களின் பார்வைக்கு:
பாராலிம்பிக் போட்டிகள் 2024 தொடங்குவதை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் தனது டூடுலை வெளியிட்டு இருக்கிறது.https://t.co/XqrBFXLNhK
— Sriramrpckanna (@Sriramrpckanna1) August 28, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)