SL Vs NZ 2nd T20I: 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி.. பெர்குஷன் அபார பந்துவீச்சு..!

தம்புலாவில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி, நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

SL Vs NZ 2nd T20I (Photo Credit: @BLACKCAPS X)

நவம்பர் 11, தம்புலா (Sports News): இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி (SL Vs NZ) டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே 2வது டி20 போட்டி நேற்று (நவம்பர் 10) நடைபெற்றது. முதல் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி அதே தம்புலா (Dambulla) மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. IND Vs SA 2nd T20I: போராடி தோற்ற இந்திய கிரிக்கெட் அணி; தென்னாபிரிக்க அணி அசத்தல் வெற்றி.!

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் மட்டுமே அடித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக வில் யங் (Will Young) 32 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் குவித்தார். இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga) 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி, இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர் நிஷான்கா (Pathum Nissanka) நிதானமாக விளையாடினார். மறுபுறம் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து இலங்கை அணி தடுமாறியது. இந்நிலையில், கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது, நியூசிலாந்து அணியின் பிலிப்ஸ் (Glenn Phillips) கடைசி ஓவரை வீச அந்த ஓவரில் மட்டும் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தழுவியது. இறுதியில் இலங்கை அணி 19.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் பதும் நிஷான்கா 51 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இதனால், இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் டி20 தொடர் சமனில் முடிவடைந்தது. இரண்டு ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய பெர்குஷன் (Lockie Ferguson) ஆட்டநாயகன் விருதை பெற்று சென்றார்.

பெர்குஷன் அபார பந்துவீச்சு: