நவம்பர் 11, கியபெர்ஹ (Sports News): சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்க நாட்டுக்கு (Team India South Africa Tour T20I 2024) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நான்கு டி20 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி - தென் ஆப்பிரிக்கா (IND Vs SA T20I 2024) அணியுடன் மோதுகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, நேற்று தென்னாப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 ஆட்டம் அங்குள்ள கியபெர்ஹ நகரின் மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறிய இந்தியா:
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஓபனிங்கில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 3 பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காமல் வெளியேறினார். அபிஷேக் சர்மா, சூரியகுமார் யாதவ் என அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் விழுந்தன. பின்னர் களமிறங்கிய திலக் வர்மா மற்றும் அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்த வழிவகை செய்தனர். நேற்றைய ஆட்டத்தில் பாண்டியா 45 பந்துகளில் 39 ரன்னும், அக்சர் படேல் 21 பந்துகளில் 27 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். IND Vs SA 1st T20: சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம்., வருணின் அபார பந்துவீச்சு.. தென்னாபிரிக்க மண்ணில் முதல் வெற்றிக்கனியை சுவைத்த இந்திய அணி.!
நின்று களமாடி வெற்றியடைந்த தென்னாபிரிக்க அணி:
இதனால் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, தொடக்கத்திலிருந்து நின்று நிதானமாக ஆடி தனது அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் திரிஸ்டியன் 41 பந்துகளில் 47 ரன் அதிகபட்சமாக நடித்திருந்தார். எஞ்சிய வீரர்களில் ஒருசிலர் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், அவர்களின் நிதானமான ஆட்டம் அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தது. இறுதியில் 19 ஓவரில் ஏழு விக்கெட் இழந்த தென்னாபிரிக்க அணி, 128 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது.
அடுத்த ஆட்டம்:
இந்தியாவின் சார்பில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி (Varun Chakaravarthy), நேற்றைய டி20 ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை ஒரே நாளில் கைப்பற்றி அசத்தியிருந்தார். அடுத்த ஆட்டம் நவம்பர் 13 அன்று இந்திய நேரப்படி இரவு 08:30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியின் நேரலையை நீங்கள் ஜியோ சினிமா (Jio Cinema) செயலியில் கண்டுகளிக்கலாம்.
திரிஸ்டனின் அதிரடி ஆட்டமும்-வெற்றிக் கொண்டாட்டமும்:
Tristan comes up trumps for the Proteas 🤩
The hosts level the 4-match series in style 👏#SAvIND #JioCinemaSports pic.twitter.com/nhIVIsTtB2
— JioCinema (@JioCinema) November 10, 2024