Paralympics 2024: பாராலிம்பிக்ஸ் 2024.. வெண்கல பதக்கம் வென்று தங்கவேலு மாரியப்பன் சாதனை..!

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் (T63) வெண்கலப் பதக்கம் வென்றார்.

Mariyappan Thangavelu (Photo Credit: @rais_shk X)

செப்டம்பர் 04, பாரிஸ் (Sports News): பாரிஸ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்காக 17-வது பாராலிம்பிக்ஸ் (Paralympics Games Paris 2024) தொடர் நடைபெற்று வருகின்றது. இதில், நேற்று நடந்த போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் ஏழு பதக்கங்களை வென்று மொத்தம் 20 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 19-வது இடத்தில் உள்ளது. அதில் 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் உள்ளிட்டவைகள் அடங்கும். Paralympics 2024: ஒரே நாளில் 7 பதக்கங்களை வென்று அசத்தல்.. தமிழக வீராங்கனைகள் சாதனை..!

இந்நிலையில் உயரம் தாண்டுதல் பிரிவில் கலந்து கொண்ட தங்கவேலு மாரியப்பன் வெண்கலம் வென்று அசத்தினார். முதல் இரு இடங்களை முறையே அமெரிக்க வீரர் ஏல்ரா, இந்திய வீரர் சர்தகுமார் ஆகியோர் தாண்டினர். இதனிடையே பாரா ஒலிம்பிக்கில் மூன்று பதக்கம் வென்ற நான்காவது இந்திய வீரர் என்ற சாதனை மாரியப்பன் தங்கவேலுக்கு சொந்தமானது. அது மட்டுமில்லாமல் தொடர்ந்து மூன்று பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் என்ற முதல் இந்தியர் என்ற சாதனையும் மாரியப்பனது கிடைத்திருக்கிறது.