செப்டம்பர் 03, பாரிஸ் (Sports News): பாரிஸ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்காக 17-வது பாராலிம்பிக்ஸ் (Paralympics Games Paris 2024) தொடர் நடைபெற்று வருகின்றது. இதில், நேற்று நடந்த போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் ஏழு பதக்கங்களை வென்று மொத்தம் 15 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளது. அதில் 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் உள்ளிட்டவைகள் அடங்கும். நேற்று நடைபெற்ற போட்டிகளில் தமிழக வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் (Thulasimathi Murugesan) வெள்ளிப்பதக்கமும் மனிஷா ராமதாஸ் (Manisha Ramadass) வெண்கல பதக்கமும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று (செப்டம்பர் 03) இந்திய வீரர்கள் மேலும் பல முக்கிய போட்டிகளில் பதக்கம் (Medal) வெல்ல வாய்ப்பு உள்ளது. Chennai Formula 4 Night Race: சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம்.. வெற்றியாளர்களின் முழு விபரம் இதோ..!
இந்நிலையில், இந்திய அணி இன்று அதிகப்போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் முக்கியமாக 5 பதக்கப்போட்டிகளில் கலந்து கொள்கிறது. இதனால், இன்றைக்கு இந்தியாவுக்கு 3 பதக்கமாவது கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. பாரா தடகளத்தில் 4 இறுதிப் போட்டிகளிலும், பாரா துப்பாக்கி சுடுதலில் ஒரு இறுதிப் போட்டியிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். எனவே, இந்தியா சில பதக்கங்களை வெல்ல வாய்ப்பு உள்ளது. தற்போது, இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் வென்றுள்ளது. இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கிற பாராலிம்பிக்ஸ் தொடர் செப்டம்பர் 08-ஆம் தேதி உடன் முடிவடைய உள்ளது.