Asian Games 2023: 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவிற்கு தங்கம்.! மின்னல் வேகத்தில் ஓடிவென்ற பரூல் சௌத்ரி.!

இவர் ஏற்கனவே நேற்று நடைபெற்ற 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.

Parul Chowdry (Photo Credit: Twitter)

அக்டோபர் 03, ஹாங்சோ (Sports News): சீனாவின் ஹாங்சோ (Hangzhou) நகரத்தில் 19 ஆவது ஆசிய போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவைச் சேர்ந்த பரூல் சௌத்ரி (Parul Chowdry) தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

28 வயதாகி இருக்கும் இவர் 9:38.76 மணித்துளிகளில் ஓடி சீனா மற்றும் ஜப்பான் போட்டியாளர்களை வென்றிருக்கிறார். இது இந்தத் தொடரில் இந்தியா பெறும் 14 வது தங்கப்பதக்கம் ஆகும்.நேற்று நடைபெற்ற 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பரூல் சௌத்ரி வெள்ளி பதக்கம் வென்றார். Nepal Earthquake: நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவு., கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகிய சோகம்.!

இந்த ஆசிய போட்டிகளில் பரூல் சௌத்ரி இந்தியாவுக்காக இரண்டு பதக்கங்களை வென்று பெருமை சேர்த்திருக்கிறார். இந்தத் தொடரில் இந்தியா மொத்தம் 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றிருக்கிறது.