Oppo Reno 12 (Photo Credit: @ishanagarwal24 X)

பிப்ரவரி 06, புதுடெல்லி (Technology News): தற்போதைய 5ஜி காலத்தில் பலரும் அடிக்கடி ஸ்மார்ட்போன்களை மாற்றி வருகின்றனர். டெக் சந்தையில் எந்தவொரு புது மொபைல் வந்தாலும், உடனே வாங்கிவிடுகிறார்கள். அந்த வகையில் இப்பதிவின் மூலம் ரூ. 25 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகும் சிறந்த 5ஜி மொபைல் போன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

iQoo Z7 5G:

பட்ஜெட்டுக்குள் 5ஜி ஸ்மார்போன்களில் சிறந்ததாக உள்ளது இந்த iQoo Z7. இது MediaTek Dimensity 920 SoC திறனைக் கொண்டுள்ளது. 64 மெஹபிக்சல் முதன்மை கேமராவை கொண்டு வடிவமைக்கப்படுள்ளது. இன் டிஸ்பிளே சென்சார் கைரேகையுடன் 4500mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் அமைப்பைக் கொண்டுள்ளது. இது இளைஞர்களைக் கவரும் வண்ணம் இரண்டு வண்ணங்களுடன் கிளாஸிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே விலையுள்ள மோட்டோ ஜி73 யுடன் ஒப்பிடுகையில் இதன் திறன் மிக நவீனமாக உள்ளது. 6.38 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. இது கேமிங்கிற்கும் மிக ஏற்றதாக உள்ளது. மேலும் இதில் எக்ஸ்டாவாக 8ஜிபி வரை RAM அதிகப்படுத்திக்கொள்ளவும் முடியும். இதன் விலை :ரூ. 18,999 FD Vs RD: ஃபிக்ஸட் டெபாசிட் Vs ரெக்கரிங் டெபாசிட்.. யார் எதை தேர்வு செய்யலாம்?!

Xiaomi Redmi Note 12 Pro 5G:

Xiaomi Redmi Note 12 Pro 5G ஜியோமி லவர்ஸ்களுக்கு பிடத்த விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. MediaTek Dimensity 1080 சிப்பும், 16MP, 1080p பின்புற கேமராவும், சைடில் ஃபிங்கர்பிரிண்டும் வைத்து வடிவமைத்துள்ளனர். ஹெவி கேமிங்களுக்கும் பொருத்தமானதாக உள்ளது. 4980mah பேட்டரிகளையும் மேலும் 120 வாட் அதிவேக சார்ஜிங் சிஸ்டத்தையும் கொண்டுள்ளது.19 நிமிடத்தில் முழு சார்ஜிங்கும் ஆகும் வகையில் வடிவமைகப்பட்டுள்ளது. ஸ்பீகர்களில் ஃபோனின் மேலும் கீழும் இரு புறமும் ஹை கிளியர் வால்யூமாக கொடுக்கப்படுள்ளது. ஜியோமிக்கு ஸ்பெஷலான வித்திலேயே கேமாரக்க இருமுபுறமும் கொடுத்திருப்பது போட்டோ லவ்வர்ஸ்களுக்கு பிடிக்கும். இதன் விலை: ரூ.24,999

Vivo Y100:

Vivo நிறுவனம் எப்போதும் ஃபோனின் கலர்களும் மாடல்களும் தனித்துவமாக இருப்பதில் அதிக கவனம் செலுத்துவர் அதேபோல் இந்த Vivo Y100 மாடல் போனில் கலர் சேஞ்ஜிங் டெக்லாஜியை அறிமுகப்படுத்தியுள்ளது. வெய்யிலில் எடுத்து செல்லும் போது இதன் லைட் கலர், டார்காக மாறும். மூன்று கலர்களில் கிடைக்கிறது. இதில் ஏதேனும் வடிவமுடைய பொருளை வைத்து டிசைனும் மாற்றலாம். பட்ஜெட் மொபைலில் இது போன்ற ஃபீச்சர்கள் அதிக வரவேற்பு பெறுகின்றன. கைக்கு சுலபமாக கையாளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 64 மெஹா பிக்சல் ஓஎஸ் முதன்மை மற்றும் 2 மெஹாபிக்சல் மேக்ரோ பின்புற கேமராவும், 16MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 6.38 இன்ச் AMOLED, முழு HD+ கொடுக்கப்பட்டுள்ளது. 44வாட் 4500 mah பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. விலை ரூ. 24,999

Infinix Zero 5G 2023 turbo:

Infinix நிறுவனம் தனது Infinix Zero 5G 2023 புது மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. லெதர் பினிஷ் பேக்குடன் 6.78 இன்ச் டிஸ்பிளேவும் கொண்டுள்ளது. 1080 mediatek dimensity புராசஸ்ரை பட்ஜெட்டுக்குள் கொண்டுள்ளது. முழு கேமிங் மாடல் இல்லையெனினும் ஹை பர்ஃபாமன்ஸைக் கொண்டுள்ளது. 8 GB RAM மற்றும் 256 GB இன்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. டியூயல் 5க் சிம் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது LCD டிஸ்பிளேவைக் கொண்டிருக்கிறது. 5000mah, 33வாட் சார்ஜரை கொண்டு 3 கலர்களில் கிடைக்கிறது. பட்ஜெட்டில் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த டர்போ சிறந்தது. விலை: 19,999 IRCTC Cancellation Charges: ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுனா எவ்ளோ பணம் கிடைக்கும்? விபரம் உள்ளே.!

Samsung Galaxy A14 5G:

அதிக 5ஜி போட்ஃபோலியோவைக் கொண்டுள்ள சாம்சங் நிறுவனம், தற்போது 3 கலர் வேரியண்டுகளில் இந்த Samsung Galaxy A14 5G அறிமுகப்படுத்தியுள்ளது. இது பாக்ஸ் டிட்ஸைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எக்ஸினோஸ் 1330 புராசஸரைக் கொண்டுள்ளது. 64GB 4GB RAM, 128GB 6GB RAM, மற்றும் 128GB 8GB RAM என்ற ஸ்டோரேஜ் கொண்ட 3 வேரியண்டுகளில் கிடைக்கிறது. டியூயல் 5ஜி சிம் உடன் மெமரிகார்டு பொருத்தும் வசதியும் உள்ளது.6.60 இன்சுடன் LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 5000mAh மற்றும் 15வாட் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. விலை: 16,499 முதல் 18,999