Paris Olympics 2024: முதல் பதக்கத்தை பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் வென்றது இந்தியா; சாதனை செய்த பெண் சிங்கம்.!

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பின்னர் 2024 ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் போட்டியில் உறுதி செய்துள்ளது இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Manu Bhaker (Photo Credit: Facebook).

ஜூலை 28, பாரிஸ் (Sports News): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில், 33வது ஒலிம்பிக் போட்டிகள் 2024 (Olympics 2024 - Paris) 26 ஜூலை 2024 அன்று முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா சார்பில் 117 வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். மொத்தமாக சர்வதேச அளவில் 10,214 க்கும் அதிகமான வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த ஒலிம்பிக் போட்டியில், 32 விளையாட்டுகளில் 329 பிரிவாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. 206 நாடுகள் இந்த போட்டிகளில் பங்கேற்று இருக்கின்றன. Paris Olympics 2024: 5 பதக்கங்களுடன் முன்னிலையில் இருக்கும் ஆஸி., அடுத்தடுத்த இடங்களில் சீனா, அமெரிக்கா.!

பாரிஸ் ஒலிம்பிக்சில் முதல் பதக்கம்:

இந்நிலையில், இந்தியா சார்பில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (10 m Air Pistol) பிரிவில் கலந்துகொண்ட மனு பாக்கர் (Manu Bhaker), இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் அவர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் கடுமையாக உழைத்தும் வெற்றி கிடைக்காத காரணத்தால் அதீத வருத்தத்தில் வெதும்பியவர், தற்போது கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி இந்தியாவுக்காக வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இதன் வாயிலாக 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் புத்தகத்தையும் உறுதி செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு:

இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ள மனுவை பாராட்டியுள்ள முதல்வர், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "இது ஒரு வரலாற்று பதக்கம்.. இந்தியாவின் முதல் புத்தகத்தினை வென்றதற்காக நன்றி, வாழ்த்துக்கள். இந்தியாவுக்காக துப்பாக்கிசூடும் போட்டியில் பதக்கம் வென்றுள்ள முதல் பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளது சிறப்பு வாய்ந்தது, நம்பஇயலாத சாதனை" என தெரிவித்துள்ளனர்.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif