Paris Olympics 2024 (Photo Credit: Team LatestLY)

ஜூலை 28, பாரிஸ் (Sports News): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில், 33வது ஒலிம்பிக் போட்டிகள் 2024 (Olympics 2024 - Paris) 26 ஜூலை 2024 அன்று முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா சார்பில் 117 வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். மொத்தமாக சர்வதேச அளவில் 10,214 க்கும் அதிகமான வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த ஒலிம்பிக் போட்டியில், 32 விளையாட்டுகளில் 329 பிரிவாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. 206 நாடுகள் இந்த போட்டிகளில் பங்கேற்று இருக்கின்றன. DD Vs SMP Highlights: ஷிவம் சிங்கின் அதிரடி சதத்தால் திண்டுக்கல் அணி அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்..! 

முதல் 3 இடங்களில் யார்? விபரம் இதோ:

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக விறுவிறுப்புடன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சார்பில் தற்போது வரை எந்த விதமான விருதுகளும் வாங்கப்படவில்லை. அதேவேளையில் ஆஸ்திரேலியா 3 தங்கம், 2 வெண்கலம் என 5 பதக்கங்கள் பெற்று முதல் இடத்திலும், சீனா 2 வெள்ளி, 1 வெண்கலம் என இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. பிரான்ஸ், கொரியா, பெல்ஜியம், ஜப்பான், கஜகஸ்தான், ஜெர்மனி ஆகிய நாடுகள் புத்தகங்களின் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. சீனா 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு பிரிவில் தனது முதல் பதக்கத்தை உறுதி செய்தது. அந்நாட்டின் வீரர்கள் ஹுவாங் மற்றும் ஷெங் ஜோடி, தென்கொரியா அணியினரை தோற்கடித்து பதக்கத்தை தனதாக்கி கொண்டனர். இந்திய அணியினரும் பல பதக்கங்களை உறுதியாக்க தனது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.