Security Tightened In Newyork for IND Vs PAK: ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி மைதானங்களுக்கு பலத்த பாதுகாப்பு..!
டி20 உலகக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு, நியூயார்க்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மே 30, நியூயார்க் (Sports News): ஐசிசி டி20 2024-ஆம் ஆண்டு உலகக் கோப்பை (ICC T20 WC 2024) தொடரில் வருகின்ற ஜூன் 9-ஆம் தேதி அன்று, இந்தியா-பாகிஸ்தான் (IND Vs PAK) அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதி, நியூயார்க்கில் உள்ள ஐசனோவர் பார்க் மைதானத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே ஆளுநர் அலுவலகத்தின் அறிக்கையில், மன்ஹாட்டனுக்கு கிழக்கே சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஐசனோவர் பார்க் மைதானத்தில், வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி முதல் ஜூன் 12 வரையில் 8 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில், 2 ஆசிய பரம எதிரி அணிகள் மோதவுள்ளன. இதனால் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன எனவும், இதுவரை நம்பகமான எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Gold Smuggling Case: காங்கிரஸ் தலைவர் சசி தரூருக்கு புதிய சிக்கல்? தங்கக்கடத்தில் வழக்கில் பிஏ கைது., அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், 'அனைத்து விளையாட்டு போட்டிகளும் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய, சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்தார். முழுமையான ஸ்கிரீனிங் செயல்முறைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உயர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நியூயார்க் மாநில காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பொது பாதுகாப்புக்கு முதன்மையான முன்னுரிமை அளிக்கப்பட்டு, உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சிகரமான அனுபவத்தை பெற நாங்கள் தீவிர முயற்சிகள் ஈடுபட்டு வருகிறோம்' எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, ஐசிசி செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், எங்களிடம் வலுவான பாதுகாப்பு திட்டம் உள்ளது. இந்த தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறோம். ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில், போட்டிகளை நடத்தும் அனைத்து மைதானங்களிலும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.