SL Vs NED Highlights: இலங்கை அணி அதிரடி ஆட்டம்; நெதர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி..!
இன்று நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி, இந்த தொடரில் தனது முதல் வெற்றியை ருசித்தது.
ஜூன் 17, கிரோஸ் ஐலெட் (Sports News): ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரில் இன்று நடைபெற்று முடிந்த 38-வது லீக் போட்டியில் இலங்கை-நெதர்லாந்து (SL Vs NED) அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி அதிரடியாக விளையாடியது. Kanchanjungha Express Crash: பயணிகள் இரயில் மீது சரக்கு இரயில் மோதி பயங்கர விபத்து; பயணிகள் நிலை என்ன?..!
சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தாலும், பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினர். 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 201 ரன்களை குவித்தனர். இலங்கை அணி தரப்பில் குஷால் மென்டிஸ், அசலங்கா ஆகியோர் தலா 46 ரன்களை அடித்தனர். இதனையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து அணி வீரர்கள் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர்.பின்பு, அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து தோல்வியை நோக்கி பயணித்தனர்.
இறுதியில், 16.4 ஓவர்களில் 118 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இலங்கை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் எட்வர்ட்ஸ் மற்றும் தொடக்க ஆட்டகாரர் மைக்கேல் லெவிட் ஆகியோர் 31 ரன்களை அடித்தனர். இலங்கை அணி சார்பில், நுவான் துஷாரா 3 விக்கெட், பதிரான, ஹசரங்கா தலா 2 விக்கெட், சனகா மற்றும் தீக்சனா ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை சரித் அசலங்கா பெற்று சென்றார்.