SL Vs NZ 1st ODI: 27 ஓவர் 221 ரன் இலக்கு.. இலங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. நியூசிலாந்து ஏமாற்றம்..!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நவம்பர் 14, தம்புல்லா (Sports News): இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி (SL Vs NZ) மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி தம்புல்லாவில் (Dambulla) நேற்று (நவம்பர் 13) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் பந்து வீசியபோது, மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் அரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது. RSA Vs IND 3rd T20I: அபிஷேக் சர்மா, திலக் வர்மா அதிரடி.. இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி..!
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் விளையாடிக் கொண்டிருந்த போது, மழை குறுக்கீடு காரணமாக முதல் இன்னிங்ஸ் முடிவு பெற்றது. இலங்கை அணி 5 விக்கெட்களை இழந்து 324 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக அவிஷ்கா பெர்னாண்டோ (Avishka Fernando) 100 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடிய குஷால் மென்டிஸ் (Kusal Mendis) 128 பந்துகளில் 143 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணி சார்பில் ஜேக்கப் டப்பி (Jacob Duffy) 3, பிரேஸ்வெல், சோதி தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.
நீடித்த மழை காரணமாக, நியூசிலாந்து அணிக்கு 27 ஓவர்களில் 221 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் வில் யங் (Will Young) 46 பந்தில் 48 ரன்கள், டிம் ராபின்சன் (Tim Robinson) 36 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இறுதியில், நியூசிலாந்து அணி 27 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியின் பந்துவீச்சில் தில்சன் மதுஷங்கா (Dilshan Madushanka) 3, தீக்ஷனா மற்றும் அசலங்கா தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள். ஆட்டநாயகன் விருதை குஷால் மென்டிஸ் பெற்று சென்றார்.