RSA Vs IND 3rd T20I (Photo Credit: @cricbuzz X)

நவம்பர் 14, செஞ்சுரியன் (Sports News): தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், மூன்றாவது டி20 போட்டி (RSA Vs IND) செஞ்சுரியன் (Centurion) நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய சஞ்சு சாம்சன் தொடர்ந்து 2வது முறையாக டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர், ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma), திலக் வர்மா ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தனர். SL Vs NZ 1st ODI: இலங்கை அணி 324 ரன்கள் குவிப்பு.. இருவர் சதமடித்து அசத்தல்..!

இந்த இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. அபிஷேக் ஷர்மா 50 ரன்கள், சூரியகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், ரிங்கு சிங் 8 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் அதிரடி காட்டிய திலக் வர்மா (Tilak Varma) 51 பந்துகளில் தனது முதல் சதத்தை விளாசினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ரியான் ரிகல்டன் 20 ரன்களிலும், ரீசா ஹென்றிக்ஸ் 21 ரன்களிலும், ஏய்டன் மார்க்கரம் 29 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 10 ஓவர் முடிவில் 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது, அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிச் கிளாசன் (Heinrich Klaasen) 22 பந்துகளில் அவர் 41 ரன்கள் குவிக்க தென்னாப்பிரிக்க அணி சரிவிலிருந்து மீண்டது.

இந்நிலையில், மில்லர் 18 ரன்கள் எடுத்திருந்தபோது அக்சர் பட்டேலின் அபார கேட்ச் ஆல் ஆட்டம் இழந்தார். இறுதியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மார்க்கோ யான்சன் (Marco Jansen) சிக்சர் மழை பொழிய 17 பந்துகளில் அவர் 54 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு பயத்தை காட்டினார். இறுதியில் அவர் அர்ஸ்தீப் சிங் (Arshdeep Singh) பந்தில் அவுட்டானார். தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். ஆட்டநாயகன் விருதை திலக் வர்மா பெற்று சென்றார். தற்போது, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் கடைசி டி20 போட்டி வரும் நவம்பர் 15-ஆம் தேதி நடைபெறும்.

அதிரடி காட்டிய ஹென்ரிச் கிளாசன்: