PNG Vs NG: 79 ரன்களில் சுருண்டுபோன பப்புவா அணி; நியூசிலாந்து அபார வெற்றி.!
78 ரன்களில் சுருண்டுபோன பப்புவா நியூ கினியா அணியை, நியூசிலாந்து அணி எளிதில் எதிர்கொண்டு வெற்றி அடைந்தது.
ஜூன் 18, சான் பெர்னாண்டோ (Sports News): அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024-ன் (T20 WORLD CUP 2024) 39 வது ஆட்டம், நேற்று அங்குள்ள டோரோபா பிரைன் லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பப்புவா நியூகினியா - நியூசிலாந்து (PNG Vs NZ) அணிகள் மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து, பப்புவா நியூ கினியா பேட்டிங் செய்தது.
தடுமாறிய பப்புவா நியூ கினியா:
அந்த அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இருவரும், 18 பந்துகளை எதிர்கொண்டு ஏழு ரன்கள் மட்டுமே எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். அதனைத் தொடர்ந்து சார்லஸ் 25 பந்துகளில் 17 ரன், சேசே 27 பந்துகளில் 12 ரன்கள் என மெதுவாக ஸ்கொரை உயர்த்தி இருந்தனர். நியூசிலாந்தின் பந்துவீச்சால் பப்புவா, தனது அணிக்கான ரன்களை சேர்க்க இயலாமல் தடுமாறி விளையாடிக் கொண்டு இருந்தது. Auto-Bus Accident: ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 2 ராணுவ வீரர்கள் பலி..! ஆட்டோ ஓட்டுநர் உட்பட 7 பேர் படுகாயம்..!
இப்படியாக ஆட்டத்தின் முடிவில் 19.4 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்த பப்புவா நியூ கினியா அணி, மொத்தமாக 78 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தது. அணியின் வீரர்கள் அனைவரும் சொற்பரன்களில் அடுத்தடுத்து வெளியேறி இருந்தனர். நியூசிலாந்தின் சார்பில் பந்து வீசியவர்களில் லாக்கி 3 விக்கெட்டையும், போல்ட், டிம், சோதி ஆகியோர் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.
நியூசிலாந்து அணி வெற்றி:
இதனையடுத்து, 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்தின் கான்வே 32 பந்துகளில் 35 ரன்கள் அடித்து அசத்தினார். கேன் வில்லியம் மற்றும் மிட்செல் ஆகியோரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். 12.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி அடைந்தது. நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்க பிடிக்க முடியாமல் பப்புவா திணறிப்போன நிலையில், அவர்களது தோல்வி உறுதியானது. எளிய இலக்கை எதிர்கொண்ட நியூசிலாந்து அணி தனது வெற்றியை நிலை நாட்டியது.