Ranji Trophy 2024: ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி படுதோல்வி.. மும்பை அணி அபார வெற்றி.. விவரம் இதோ..!
இந்த ஆட்டத்தில் மும்பை அணி வீரர் முஷீர் கான் 55 ரன்கள் எடுத்து அசத்திருந்தார். போட்டியில் நடந்த சுவாரசியங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்..
மார்ச் 04, மும்பை (Cricket News): இந்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மிக உயர்ந்த போட்டியாக ரஞ்சி கோப்பை பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகள் வருவதற்கு முன்பாக, ரஞ்சி கோப்பை போட்டிகளில் (Ranji trophy 2024 TN Vs MUM) சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் வெற்றிகரமாக நடைபெறும் ரஞ்சி கோப்பை போட்டிகள் இந்த ஆண்டும் தற்போது நடைபெற்று வருகிறது.
இறுதி கட்டத்தை எட்டியுள்ள ரஞ்சி கோப்பை: ரஞ்சி கோப்பையில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்று 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்று, அதில் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் விதர்பா vs மத்தியப் பிரதேசம் மற்றும் மும்பை vs தமிழ்நாடு இடையே மார்ச் 2ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டிகளில் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளுக்கிடையிலான போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் தமிழ்நாடு அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக விஜய் சங்கர் 44 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களும் எடுத்தனர். தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்களை எடுத்தார். Rolls Royce Arcadia Droptail: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிய சொகுசு கார்.. ஆர்கேடியா டிராப்டெயில் வெளியீடு..!
விறுவிறுப்பான ஆட்டம்: மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டகாரர்கள் சொதப்ப, நிதானமாக விளையாடிய முஷீர் கான் அரைசதம் கடந்தார். கேப்டன் ரகானே, ஐயர் உட்பட அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக இறுதியில் தாகூர் மற்றும் தனுஷ் இணைந்து விளையாடி மும்பை அணி 378 என்ற நல்ல ஸ்கோர்யை எட்டியது. தாகூர் அதிரடியாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தனுஷ் 89 ரன்களுடன் இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்தார். தமிழ்நாடு அணி சார்பாக கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
3 ஆம் நாள் ஆட்டம்-தமிழக அணி படுதோல்வி: தமிழக அணி 232 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ்-ஐ தொடங்கியது. மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி அடுத்து அடுத்து வெளியேற பாபா இந்திரஜித் மட்டும் நிதானமாக விளையாடி 70 ரன்கள் எடுத்தார். சரியான பங்களிப்பு இல்லாததால் பெரிய ஸ்கோர் எடுக்க முடியாமல் 51.5 ஓவர்களில் 162 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் மும்பை அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.