Sikandar Raza Talked About Defeats: மோசமான தொடர் தோல்விக்கு இதுதான் காரணம்.. சிக்கந்தர் ராசா வேதனை..!

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-4 என்ற கணக்கில் தோல்வியை கண்ட ஜிம்பாப்வே அணியின் கேப்டன் உருக்கமாக பேசியுள்ளார்.

Sikandar Raza (Photo Credit: @mufaddal_vohra X)

ஜூலை 15, ஹராரே (Sports News): ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட (India Tour Of Zimbabwe 2024) இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்ற நிலையில் அடுத்த 4 ஆட்டங்களிலும், தோல்வியை தழுவியது. இதனால் இந்த தொடரை 1-4 என்ற கணக்கில் சிக்கந்தர் ராசா (Sikandar Raza) தலைமையிலான ஜிம்பாப்வே அணி இழந்தது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. இதன்காரணமாக இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Euro Cup Final 2024: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி; 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்..!

இந்நிலையில், இந்த போட்டி முடிந்து ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா கூறுகையில், 'உண்மையிலேயே இந்த தொடரில் எங்களது அணியின் சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பிளசிங் முசரபாணி மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தார். நாங்கள் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் இந்த தொடர் முழுவதுமே சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். இதுவே நாங்கள் தொடரை இழக்க காரணமாக அமைந்தது. இன்னும் பீல்டிங்கில் முன்னேற்ற வேண்டியவைகள் நிறைய இருக்கின்றன. நாங்கள் செய்யும் சில தவறுகளை திருத்த இந்த தொடரில் கண்ட தோல்வி எங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மேலும், என்னுடைய உடல் தகுதி சற்று கவலை அளிக்கிறது. தோள்பட்டை 100% முழு திறனுடன் இல்லை. எனக்கு சிறிய அளவிலான காயம் இருக்கிறது. எனவே நான் என்னுடைய பணிச்சுமையை கவனிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட உள்ளோம். அதற்கு முன்னதாக நான் இன்னும் சில தினங்களில் "ஹண்ட்ரெட்" தொடருக்காக செல்ல உள்ளேன். அதன்பிறகு மீண்டும் ஜிம்பாப்வே அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவேன்' என்று அவர் உருக்கமாக பேசினார்.