Virat Kohli: 9 பந்துகளில் ரன்களே எடுக்காமல் ஆட்டமிழந்த விராட் கோலி; ரசிகர்கள் ஏமாற்றம்.. இந்தியா - நியூசிலாந்து போட்டியில் 8 ஆண்டுகள் பின் நடந்த மாற்றம்.!
பெங்களூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியை மழை குறுக்கிடுவதால் ஆட்டம் தடைபட்டு பின் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 17, பெங்களூர் (Cricket News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் அடுத்தடுத்து மோதுகிறது. முதல் டெஸ்ட் தொடர் நேற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. போட்டியின் முதல்நாள் மழை காரணமாக ஆட்டம் தள்ளி வைக்கப்பட்டது. IND Vs NZ 1st Test: பெங்களூரில் கனமழை; இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் ரத்து..!
விராட் கோலி அவுட்:
இரண்டாம் நாளாக இன்று இந்தியா பேட்டிங் தேர்வு செய்த நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா ஏழாவது ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து, விராட் கோலி கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நபராக களமிறக்கப்பட்டார். இதனிடையே, விராட் கோலி 9 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் வில்லியம் ரூர்கேவிடம் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
8 ஆண்டுகளுக்கு பின் மாற்றம்:
விராட் கோலி பெரும்பாலும் ஒரு நாள் போட்டிகளில் மூன்றாவது இடத்தில் களம் இறங்கினாலும், டெஸ்ட் போட்டிகளில் நான்காவதாக களமிறங்குவதை வாடிக்கையாகக் கொண்டார். டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நபராக களமிறங்க வேண்டிய ஷுப்மன் ஹில் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகிய நிலையில், விராட் கோலி மூன்றாவது இடத்தில் களமிறங்க ஆயத்தமாயினார். சர்ப்ராஸ் கான் நான்காவது இடத்தில் நுழைந்தத்தொடர்ந்து, விராட் கோலி மூன்றாவது நபராக களமிறங்கினார்.
காலை 11 மணி நிலவரப்படி இந்திய அணி 12.3 ஓவர் முடிவில் 13 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது, விராட், ரோஹித், சர்ப்ராஸ் ஆகியோரின் 3 விக்கெடை இழந்துள்ளது. மழையினால் தள்ளி வைக்கப்பட்ட ஆட்டம், 11.05 க்கு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
இன்று களமிறங்கவுள்ள இந்திய அணி வீரர்களின் பட்டியல்: