IPL Auction 2025 Live

Super Four Team: யாரை களமிறக்குவர் கேப்டன் ரோகித் சர்மா?- ஷமியா? தாக்கூரா?: சஸ்பென்சில் ரசிகர்கள்.!

ஆசிய கோப்பை தொடரில் நடக்கவிருக்கும் சூப்பர் போர் சுற்றில் பும்ரா மீண்டும் கலந்து கொள்ள இருப்பதால் அணியில் ஷர்துல் தாக்கூர் இடம் பெறுவாரா? இல்லை முகமது ஷமி? சாமி பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Shardul Takur/Mohammed Shami (Photo Credit: Twitter)

செப்டம்பர் 7,கொழும்பு (Sports News): ஆசிய கோப்பை தொடரில் (Asia Cup 2023) நேபாள அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பந்து வீசிய இந்திய அணி, 230 ரன்களை அந்த அணிக்கு விட்டுக் கொடுத்தது. இதற்கு இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமடைந்து இருப்பதே காரணம் என்று முன்னாள் வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய அணியில் பும்ரா மற்றும் முகமது ஷமி (Mohammed Shami) ஆகிய இருவரும் திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள். அவர்கள் இருவரும் போட்டியில் இடம் பெற்று பந்து வீசினால் அது எதிரணிக்கு  கடும் சவாலாக இருக்கும். Funds for Renovation: சர்வதேச தரத்திற்கு உயரப்போகும்  கன்னியாகுமரி ரயில் நிலையம் : 49.36 கோடி நிதி ஒதுக்கீடு.!

ஆனால்  ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஷமிக்கு பதிலாக ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் (Shardul Takur) விளையாடினார். ஆனால் அந்தப் போட்டியில் தாக்குர் மூன்று ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அதைத்தொடர்ந்து நேபாள அணிக்கு எதிராக இந்தியா விளையாடிய போட்டியில் பும்ரா (Jasprit Bumrah) இடம்பெறாததால் ஷமி, சிராஜ்  மற்றும் தாக்கூர் ஆகிய மூவரும் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களாக களமிறங்கினர். அந்தப் போட்டியில் ஷமி அபாரமாக விளையாடி நேபாள அணி ரன்களை எடுக்க விடாமல் தடுத்தார்.

இந்நிலையில் அடுத்து நடைபெறவிருக்கும் சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக  இந்தியா விளையாடப் போகிறது. இந்தப் போட்டியில் பும்ரா மீண்டும் களம் இறங்குவார். பும்ராவுடன் ஷமி அணியில் இணைவதே சரியான கூட்டணியாக இருக்கும்.

ஆனால் பேட்ஸ்மேன்கள் தான் அதிகம் தேவை என்று நினைக்கும் கேப்டன் ரோஹித் சர்மா ஷமியை தேர்வு செய்யாமல் தாக்கூரை களம் இறக்குவாரா? என்ற கேள்வி விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.