Diwali Holiday: குஷியோ குஷி.. தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை; தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ உத்தரவு.!

சொந்த ஊருக்கு சென்று வரும் மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

MK Stalin | Diwali Celebration (Photo Credit: @MKStalin X / Pixabay)

அக்டோபர் 19, தலைமை செயலகம் (Chennai News): 2024ம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை, அக்.31, 2024 அன்று உலகளவில் உள்ள பெருவாரியான இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி (Diwali Celebration 2024) பண்டிகையையொட்டி வெளியூர்களில் தங்கியிருந்து படிப்பு, வேலை என இருப்போர், சொந்த ஊருக்கு திரளாக புறப்பட்டு செல்வார்கள். சென்னை,  பெங்களூர், கோவை, திருப்பூர் உட்பட பல நகரங்களில் இருந்து பணியாற்றும் நபர்கள், தீபாவளி (Deepawali) பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடிவிட்டு,  பின் மறுநாளில் ஊர் திரும்புவார்கள்.  Diwali 2024: தீபாவளி 2024 எப்போது? நல்ல நேரம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்த முழு விவரம் இதோ..! 

விடுமுறை நீட்டிப்பு கோரிக்கை: 

இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை அக்.31 அன்று வியாழக்கிழமை வருகிறது. இதனால் புதன்கிழமை புறப்பட்டு ஊருக்குச் செல்வோர், வியாழன் அன்று தீபாவளியை கொண்டாடிவிட்டுபின் அன்று இரவே பணியிடங்கள், கல்வி நிலையங்களுக்கு திரும்பும் சூழல் இருந்தது. அதன்பின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வார இறுதி விடுமுறை வருகிறது. இதனால் அரசு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதோடு மட்டுமல்லாது, தனியார் துறையில் பணியற்றுவோர் புதன்கிழமை ஊருக்குச் சென்று, ஞாயிற்றுக்கிழமை பணியிடத்திற்கு திரும்பும் எண்ணத்தில் இருக்கிறார்கள். இதனால் கூடுதல் விடுமுறை கிடைக்குமா? என எதிர்பார்த்து இருந்தனர்.

விடுமுறை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு:

இந்நிலையில், தீபாவளி அக்.31 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், சொந்த ஊர் சென்று ஊருக்கு திரும்பும் நபர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு நவ.1 ம் தேதி அரசுப் பொதுவிடுமுறை அறிவித்து இருக்கிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நவ.9 அன்று பணி நாளாக நடைபெறும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். இதனால் அரசுப் பணியாளர்கள், சொந்த ஊர் சென்று திரும்புவோர் மகிழச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.