Diwali 2024 (Photo Credit: Team LatestLY)

அக்டோபர் 18, சென்னை (Festival News): இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் உள்ள இந்துக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றும் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி (Diwali Festival 2024) ஆகும். தீபாவளி வர இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த தீபாவளி (Deepavali) பண்டிகையை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். அன்றைய தினம் நண்பர்கள் குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து, இனிப்புகள் மற்றும் பல வகையான உணவுகளை சாப்பிட்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

தீபாவளி 2024:

இந்த 2024-ஆம் ஆண்டு தீபாவளி (Diwali) பண்டிகையானது தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அக்டோபர் 31-ஆம் தேதி வியாழன் கிழமை கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் பொது விடுமுறையாகும். சில மாநிலங்களில் தீபாவளி அன்று விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கம். காலை எழுந்து எண்ணெய் வைத்து குளித்து, புத்தாடை அணிந்து, விளக்கேற்றி பூஜை செய்து, பட்டாசுகள் வெடித்து தீபாவளி சிறப்பாக கொண்டாடி மகிழ்வர். International Day for the Eradication of Poverty 2024: "வறுமை என்னும் ஆழ்கடல்" இன்று சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்.!

தீபாவளி சிறப்புகள்:

குரு பகவானுக்கு உரிய வியாழக் கிழமை நாளில் சித்திரை நட்சத்திரமும் இணைந்து, இந்த 2024-ஆம் ஆண்டு தீபாவளி வருவதால் நல்ல காரியங்களை தொடங்குவதற்கான மங்களகரமான நாளாக கருதப்படுகின்றது. அதுவும் மங்களகரமான சுபமுகூர்த்த நாளுடன் வருவதால் இந்நாளில் மங்களப் பொருட்களை தாராளமாக வாங்கலாம். மேலும், சுபகாரியங்களையும் செய்யலாம்.

தீபாவளி பண்டிகை கொண்டாட உகந்த நேரம்:

தீபாவளி பண்டிகை, வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி வியாழன் கிழமை வருகிறது. எனவே, இந்நாளில் நல்ல நேரம் பார்த்து இறைவனை வழிபாடு செய்ய, அந்நாளில் ராகு காலம் தவிர்த்து, மற்ற நேரத்தில் பூஜை செய்து வழிபட உகந்த நேரமாக கருதப்படுகிறது. பூஜைகள் செய்து முடித்த பிறகு விளக்கேற்றி, பட்டாசு வெடித்தால் தீய சக்திகள் அகற்றப்படுவதாக நம்பிக்கை.

தீபாவளி பண்டிகை கொண்டாட காரணம்:

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு பல புராணக் கதைகள் உள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமான கதைகளில் ஒன்று தான் கிருஷ்ணர் நரகாசுரர் (Narakasura) என்ற அசுரனை வதம் செய்த நாளை தான், நாம் பட்டாசு வெடித்து தீபாவளியாக தினமாக கொண்டாடி வருகின்றோம். இதுவே ராமாயணத்தின் படி, ராமர் ராவணனை வென்று நாளாக கொண்டாடப்படுகின்றது. அதாவது, ராமர் வனவாச முடித்து சீதா தேவியுடன் அயோத்திக்கு திரும்பிய நாள். அவர்களை வரவேற்கும் விதமாக அயோத்தி முழுவதும் தீபங்கள் ஏற்றி, பட்டாசு வெடித்து கொண்டாடியதாக சொல்லப்படுகின்றது. இப்படியாகவும் தீபாவளி வந்தது என்று கூறப்படுகிறது.

லட்சுமி தேவி வழிபாடு:

புராணங்கள் படி, பூமி முழுவதும் இருள் சூழ்ந்து இருந்தது. அப்போது வானத்திலிருந்து தாமரை மீது அமர்ந்தபடியே லட்சுமிதேவி (Lakshmi Devi) பூமிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. லட்சுமி தேவியால் பூமி முழுவதும் வெளிச்சம் பரவியது. லட்சுமி தேவி அவதரித்த இந்த நாள் தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்றும் புராணங்கள் கூறுகின்றன. எனவேதான், தீபாவளி அன்று லட்சுமி தேவியை வரவேற்கும் விதமாக வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வழிபடுகின்றோம்.