9 Fishermen Arrested: எல்லைதாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது; கண்ணீரில் குடும்பத்தினர்.!

இதனால் அவர்களின் உறவினர்கள் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Tamilnadu Fishermen (Photo Credit: @TNRepublicnews X)

ஜூலை 23, காங்கேசன்துறை (Kankesanthurai): தமிழ்நாடு மாநிலத்தில் வசித்து வரும் மீனவர்கள், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படை மீனவர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வந்த செயல்கள் முந்தைய நாட்களை போல இல்லை. எனினும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடருகின்றது. Accident Caught on Camera: டூவீலர் மீது கார் மோதி பயங்கர விபத்து; தாய் - மகன் துடிதுடிக்க பலி., நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.! 

9 மீனவர்கள் கைது:

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள், இன்று நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அச்சமயம் அங்கு வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள், தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்து அழைத்துச்சென்றனர். இவர்கள் அனைவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைந்து தாயகம் அழைத்து வரவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.