TN Pongal Gift 2024: பொங்கல் பரிசாக ரூ.1000.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு..!

பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு 1,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Pongal Gift in Ration Shop 2024 (Photo Credit: Wikipedia)

ஜனவரி 05, சென்னை (Chennai): தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொங்கல் தினத்தை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று ஜனவரி 2 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. மேலும் முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. North Korea Attack On South Korea: தென்கொரியா மீது வடகொரியா திடீர் தாக்குதல்... பதற்றமான மக்கள்..!

பொங்கல் பரிசாக ரூ.1000: இந்நிலையில் பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர் சர்க்கரை அட்டைதாரர்கள் பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10 ஆம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்