ஜனவரி 05, சியோல் (Seoul): தென் கொரியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், இரு நாடுகளையும் ஒருசேர வட கொரியா எச்சரித்து வருகிறது. இந்நிலையில் தென் கொரியாவின் பயான்யோங் (Baengnyeon), யோன்பியோங் (Yeonpyeong) தீவுப் பகுதியில் இன்று பீரங்கித் தாக்குதல் நடத்தியிருப்பது இரு நாடுகளுக்குமிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த தாக்குதலால் எந்த ஒரு உயிர்ப்பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும் வட கொரியாவின் இந்தத் தாக்குதல் காரணமாக, பயான்யோங் (Baengnyeong) தீவுப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு மக்களுக்கு தென் கொரியா உத்தரவிட்டிருக்கிறது. Tata PUNCH EV: டாடா எலெக்ட்ரிக் கார் வெளியீடு... அதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!
கடந்த ஒரு மாதமாக வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே மிக தீவிரமாக சண்டை நடந்து வருகிறது. இப்போது இந்த பிரச்சனை போராக மாற வாய்ப்புள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். மேலும் 2018 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையில் ராணுவ ஒப்பந்தம் போடப்பட்டது. இருப்பினும், தற்போது ராணுவ ஒப்பந்தத்தை மீறி வட கொரியா தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தென் கொரியா குற்றம்சாட்டி வருகிறது.