Minor Girl Death: குளிர்பானம் குடித்த 5 வயது சிறுமி பரிதாப பலி.. பெற்றோர் கதறல்..!

திருவண்ணாமலையில் குளிர்பானம் குடித்த சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Cold Drink | Dead Body File Pic (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 12, செய்யாறு (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது 2-வது மகள் கவிஸ்ரீ (வயது 5). சிறுமி நேற்று (ஆகஸ்ட் 11) காலை வீட்டில் இருந்த உள்ளூர் கடையில் 10 ரூபாய் குளிர்பானத்தை (Cold Drink) வாங்கி குடித்துள்ளார். அதனை குடித்த சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி, மூக்கு மற்றும் வாயில் நுரை வந்துள்ளது. TN Weather Update: ஆரஞ்சு எச்சரிக்கை.. நாளைய வானிலை குறித்த அப்டேட்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தூசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement