Trichy NIT: கல்லூரி மாணவி பலாத்கார முயற்சி: கயவனுக்கு ஆதரவாக விடுதி வார்டன்.. திருச்சியில் விடியவிடிய மாணவ-மாணவிகள் போராட்டம்.!
விடுதி அறையில் தனியாக இருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற எலக்ட்ரீஷியனுக்கு விடுதி வார்டன் வக்காலத்து வாங்கியதால், திருச்சி என்.ஐ.டியில் போராட்டம் எதிரொலித்துள்ளது.
ஆகஸ்ட் 30, திருவெறும்பூர் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் (Thiruverumbur), துவாக்குடி பகுதியில் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (National Institue of Technology NIT) செயல்பட்டு வருகிறது. வெளிமாவட்ட, மாநில மற்றும் வெளிநாடுகளைச் சார்ந்த சுமார் 6000க்கும் மேற்பட்ட மாணவி-மாணவிகள் இங்கு உயர்கல்வி பயின்று வருகின்றனர். மாணவ-மாணவிகளுக்கு என பிரத்தியேகமான தனித்தனி விடுதிகளும் கல்லூரி நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாணவி பலாத்கார முயற்சி:
இந்நிலையில், சம்பவத்தன்று மகளிர் விடுதியில் (Ladies Hostel) என்ஐடி ஒப்பந்த ஊழியரான எலக்ட்ரீசியன் கதிரேசன் என்பவர், வை-பை (Wi-fi) சேவையை சரிபார்த்து வழங்க சென்றுள்ளார். அப்போது, விடுதி அறையில் தங்கியிருந்த மாணவி ஒருவர், தனியாக தனது அறையில் படித்துக்கொண்டு இருந்தார். அங்கு வேறு மாணவிகள் யாரும் இல்லை. இதனை தனக்கு சாதகமாக்க நினைத்த கதிரேசன், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். CCTV Video: கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பையை தூக்கிக்கொண்டு ஓடிய நபர்; இரயில் நிலையத்தில் பகீர் சம்பவம்.!
குற்றவாளி கைது:
கயவனின் பிடியிலிருந்து தப்பித்த மாணவி, அங்குள்ள திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இராமநாதபுரத்தைச் சார்ந்த கதிரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் மற்றும் விடுதி வார்டன் கவிதா பேகம், மாணவியை தரக்குறைவாக பேசியிருக்கிறார்.
விடுதி வார்டனின் அடாவடி பேச்சு:
நீ அணியும் ஆடையினால் தான் அவர் அப்படி நடந்து கொண்டார் என பேசி, குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு இடையே தகவல் பரவி, அனைவரும் கொந்தளித்துப் போயினர். மேலும், கல்லூரி நிர்வாகம் மற்றும் விடுதி வார்டன் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, விடுதி வளாகத்தில் மாணவ-மாணவிகள் பலரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை:
தொடர்ந்து 2 வது நாளாக விடிய-விடிய போராட்டம் நடைபெறும் நிலையில், இந்த விஷயமும் குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் காவல்துறையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான அதிகாரிகள் போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. என்ஐடி விடுதியில் பெண் வார்டன் மீது மாணவிகள் முன்வந்து புகார் அளித்தால், சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரும் அறிவித்து இருக்கிறார்.
விடுதி & கல்லூரி நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ-மாணவிகள் தொடர் போரட்டம் மேற்கொள்ளும் காட்சிகள்: