Madurai Protest: மதுரையில் போதை நடமாட்டத்துடன் திரியும் இளைஞர்கள்.. நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் கடையடைப்பு போராட்டம்..!

மதுரை ஒத்தக்கடை பகுதியில் மதுபோதையில் சாலையில் நடந்து சென்றவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

Madurai Protest (Photo Credit: Facebook)

ஏப்ரல் 29, மதுரை (Madurai News): மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்த மது போதையில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், அந்த வழியாக சென்றவர்களை தடுத்து நிறுத்தி தாக்கினர். மேலும் தட்டி கேட்ட அருகில் உள்ள கடை உரிமையாளரை அந்த கும்பல் தாக்கியதோடு கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சென்றுள்ளனர். ஏற்கனவே இதே போன்ற கும்பல் பைக்கில் செல்லும் நபர் ஒருவரை அடித்து உதைத்து காயப்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மேலும் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளனர். Banana Price Hike: வெயிலால் கருகும் வாழை தோப்புகள்.. எகிரும் வாழை இலை மற்றும் பழங்களின் விலை..!

ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் மூன்றுக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒத்தக்கடை பகுதியில் அதிகளவிற்கு போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இதுபோன்று போதை நடமாட்டத்துடன் திரியும் இளைஞர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யப்பட வேண்டும், எனவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அதன்படி, அந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.