Banana (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 29, திருவள்ளூர் (Thiruvallur News): கால நிலை மாற்றம் காரணமாக வெப்பநிலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவில் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து வெயிலானது வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து காலை 8 மணியிலிருந்தே வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டிற்குள் மக்கள் வெளியே செல்லவே அஞ்சும் நிலை வந்துள்ளது. தொடர்ந்து வெயிலினால் பல விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. TN Weather Report: வட தமிழக உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இந்நிலையில் தற்போது கோடை வெயில் காரணமாக வாழை செடிகள் காய்ந்து இலைகள் கருகி வருவதால் வாழைப்பழம், இலை ஆகியவற்றின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் வாழை தோட்டம் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் மேற்கண்ட பகுதியிலிருந்து திருமணம், சுப நிகழ்ச்சிகளுக்கு வாழைமரம், வாழை இலை, பழம் (Banana) உள்ளிட்டவற்றை மொத்தமாக பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். ஆனால் தற்போது வெயிலினால் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.