Teenager Arrested: அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி மிரட்டல்; இளம்பெண்ணிடம் ரூ.40 லட்சம் பறிப்பு.. வாலிபர் கைது..!

தேனியில் அந்தரங்கப் படங்களை வெளியிடப்போவதாக மிரட்டி, இளம்பெண்ணிடம் ரூ.40 லட்சம் வரை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Feeling Sad (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 31, தேனி (Theni News): தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 34). இவர் தனது ஊரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து (Love) வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதை ராஜமாணிக்கம் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த இளம்பெண் சென்னைக்கு வேலைக்கு சென்ற பிறகு, ராஜமாணிக்கம் அடிக்கடி சென்னை சென்று சந்தித்துள்ளார். ஷார்ஷாட் காதலனை தேடி ஓடிய 16 வயது சிறுமி; போக்ஸோவில் இருவரை உள்ளே தூக்கி வைத்த காவல்துறை.. விசாரணையில் பகீர்.!

அப்போது, ஒரு நாள் இளம்பெண் குளிக்கச் சென்ற நேரத்தில், அவரது செல்போனை பார்த்துள்ளார். அதில், இளம்பெண்ணும் வேறு ஒரு நபரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை (Intimate Photos) கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், அந்த புகைப்படங்களையும் ராஜமாணிக்கம் தனது செல்போனிற்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து, அந்த பெண் சென்னையில் இருந்து பணிமாறுதலாகி பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். அப்போது, அவர் இளம்பெண்ணின் செல்போனுக்கு அவரது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

பின்னர், அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, அந்தரங்க படங்களை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். இதைக்கேட்டு பயந்து போன அந்த இளம்பெண், பல தவணைகளாக ரூ.40 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார். ராஜமாணிக்கம் மேலும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து, இளம்பெண் தனது தாயாரிடம் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தாயார் அளித்த புகாரின்பேரில், தேனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ராஜமாணிக்கத்தை நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 29) கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif