Teenager Stabb To Death: காதல் விவகாரத்தில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை; ஒருவர் படுகாயம்.. மதுரையில் பயங்கரம்..!

மதுரையில் காதலிக்காக நடந்த சண்டையில், வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murder | crime file pic (Photo Credit: pixabay)

ஜூலை 25, தல்லாகுளம் (Madurai News): மதுரை மாவட்டம், தல்லாகுளம் ஆசாரி தெருவை சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரது மகன் காதர் இஸ்மாயில் (வயது 29). இவர், தனியார் டிராவல்ஸ் (Travells) நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில் முருகன், உசேன், ராஜா ஆகியோர் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், காதர் இஸ்மாயிலின் நண்பர் சரவணக்குமார் ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த சசிகலா (வயது 24) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நேற்றைய தினம் சசிகலாவிற்கு பிறந்தநாள் என்பதால், அவரது தோழிகள் சிக்கந்தர்சாவடியை சேர்ந்த வினோதினி மற்றும் அண்ணாநகரை சேர்ந்த பபிதா ஆகியோர் பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகளை செய்தனர்.

இதனையடுத்து, இவர்கள் மூவரும், தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு மதுரையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்களுடன் பரவை பொற்கூடல் நகரை சேர்ந்த முருகன் (வயது 32), கே. புதூர் அல் அமீன் பகுதியை சேர்ந்த ராஜா உசேன் (வயது 24) ஆகிய இருவரும் சென்றனர். இதனைப் பற்றி அறிந்த சரவணக் குமார், கடும் கோபமுற்றார். இதனிடையே அவர்கள் அங்கு மதுரை-நத்தம் சாலையில் காஞ்சாரம் பேட்டை பகுதியில் அமைந்துள்ள சாலையோர உணவகத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், தனது காதலி இருக்கும் ஓட்டலுக்கு, சரவணக்குமார் தனது நண்பர் காதர் இஸ்மாயிலை உடன் கூட்டிச் சென்றுள்ளார். NRK Vs ITT Highlights: திருப்பூர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி; நடராஜன் அபார பந்துவீச்சு..!

அங்கு ஏற்கனவே அவர்கள் இருவரும் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த நிலையில், சசிகலா மற்றும் அவரது தோழிகளுடன் தகராறு செய்துள்ளனர். அப்போது, அங்கு வந்த சரவணக்குமார் மற்றும் காதர் இஸ்மாயில் இருவரும் அவர்களை தட்டி கேட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பாக அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை (Stabbing To Death) எடுத்து காதர் இஸ்மாயிலை சரமாரியாக குத்தியுள்ளார். அவரை தடுக்க சென்ற சரவணக்குமாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அவசர ஊர்தி (Ambulance) மூலம் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு  செல்லும் வழியிலேயே காதர் இஸ்மாயில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், சரவணக்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து, சத்திரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement