ஜூலை 25, திருநெல்வேலி (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2024) இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு நேற்று நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் (NRK Vs ITT) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, திருப்பூர் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. திருப்பூர் அணியின் ஆட்டகாரர்கள் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். இதனால் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து திருப்பூர் அணி 189 ரன்கள் எடுத்தது. Meta Removes 63,000 Facebook Accounts: சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட 63000 முகநூல் கணக்குகள் நீக்கம்; மெட்டா அதிரடி.!
திருப்பூர் அணியில் அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் அரைசதம் அடித்தார். மேலும், துஷார் ரெஜா அதிரடியாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார். நெல்லை அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய நெல்லை அணியின் தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 51 ரன்களில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து ரித்திக் ஈஸ்வரன் 59 ரன்களிலும், சோனு யாதவ் 40 ரன்களில் அவுட் ஆகினர்.
இதனையடுத்து மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில், நெல்லை அணி 20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக நடராஜன் 4 விக்கெட்டுகளையும், ராமலிங்கம் ரோகித் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை சிறப்பாக பந்துவீசிய நடராஜன் பெற்று சென்றார்.
First 50 of this season for Radhakrishnan! 👏@TNCACricket @StarSportsTamil @TeamTiruppur #TNPL2024 #NammaOoruAatam #NammaOoruNammaGethu pic.twitter.com/swX8XB0uj4
— TNPL (@TNPremierLeague) July 24, 2024