10 Years Jail For The Teenager: மதுபோதையில் காவலரை பிளேடால் வெட்டிய வாலிபர்; 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..!
ஏப்ரல் 13, வேலூர் (Vellore News): வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் நகர காவல்நிலையத்தில் அருண்கண்மணி (வயது 32) என்பவர், காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, ஜோகிமடத்தை சேர்ந்த நவீன்குமார் (வயது 29) என்ற நபர் மது போதையில், தாழையாத்தம் பஜார் பகுதியில் மேல்ஆலத்தூர் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்துவந்துள்ளார். Benefits Of Dates: பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன..? – விவரம் உள்ளே..!
இந்நிலையில், ரோந்து பணியில் இருந்த காவலர் அருண்கண்மணி, குடிபோதையில் இருந்த அவரை எச்சரித்து அங்கிருந்து போக சொல்லியுள்ளார். இதில், அவர் காவலர் அருண்கண்மணியை பிளேடால் (A Teenager Who Slashed A Policeman With A Blade) முகம், காது, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். மேற்கொண்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை தடுக்க முயன்ற பொதுமக்களையும் மிரட்டியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, குடியாத்தம் நகர காவல்துறையினர் நவீன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கு வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த இறுதிக்கட்ட விசாரணையில், காவலரை தாக்கிய நவீன்குமாருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும், ஆபாசமாக பேசியதற்கு மேலும் 1 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார்.